Category Archives: தினம் ஒரு வசனம்

யாவரையும் மிகைத்தவன் அல்லாஹ்!

அவன் தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குப்படுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே தஸ்பீஹ் (துதி) செய்கின்றன – அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்: 60:24)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on யாவரையும் மிகைத்தவன் அல்லாஹ்!

சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன

“இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே! நீர் கேளும். மேலும் நபியே! நீர் சொல்லும் ‘சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன

பூர்த்தியான அல்லாஹ்வின் ஒளி!

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on பூர்த்தியான அல்லாஹ்வின் ஒளி!

குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டு போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன்: 47:24)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

ஏமாற்றும் சொற்ப சுகமான இவ்வுலக வாழ்க்கை

57:20. அறிந்து கொள்ளுங்கள்; “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும், (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on ஏமாற்றும் சொற்ப சுகமான இவ்வுலக வாழ்க்கை

வரையறையற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகள்

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட்கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 16:18)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on வரையறையற்ற அல்லாஹ்வின் அருட்கொடைகள்

அல்லாஹ் மிகத் தூய்மையானவன்!

அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் – அவர்கள் இணை வைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (அல்குர்ஆன்: 60:23)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ் மிகத் தூய்மையானவன்!

இரக்கமும், அன்பும் உள்ள இறைவன்!

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியில் உள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன்: 22:65)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இரக்கமும், அன்பும் உள்ள இறைவன்!

மன்னிக்கும் மாண்புடையோன்!

எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 4:17)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மன்னிக்கும் மாண்புடையோன்!

வானமும் பூமியும் படைத்தல் வீண் விளையாட்டா?

மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்க வில்லை. வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்து கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம். (அல்குர்ஆன்: 21:16-17)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on வானமும் பூமியும் படைத்தல் வீண் விளையாட்டா?