Category Archives: தினம் ஒரு வசனம்
வெற்றி பெற்றோரின் பண்புகள்!
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். (அல்குர்ஆன்: 23:1,2,3)
நினைவுபடுத்தப்பட்ட பின்னரும், புறக்கணிப்பவர்கள் பற்றி..
எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம். (அல் குர்ஆன்: 32:22)
ஞானம் குறித்து….
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (அல் குர்ஆன்: 2:269)
கவனித்துப் பாருங்கள்..!
‘வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்’ என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக! எனினும், ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா. (அல்குர்ஆன் 10:101)
இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவன் யார்?
இந்தப் பூமியை வசிக்கத்தக்க இடமாக ஆக்கியவனும்; அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும்; இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 27:61)
சூரியஒளியில் பிரகாசம்பெற்றுப் பிரதிபளிக்கும் சந்திரன்
“இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.” (அல்குர்ஆன் 71:16)
கோள்கள் பால்வீதியில் தவழும் அமைப்பு பற்றி..
வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன். (அல்குர்ஆன் 25:61)
இறைவனின் ஏற்பாடு
வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் 15:16)
ஒரே நீரிலிருந்து பெறப்படும் பல்வேறு சுவைகள் பற்றி..
இன்னும், பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் … Continue reading
அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும்
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (அல்குர்ஆன் 1:4)