Category Archives: தினம் ஒரு வசனம்

இறை சோதனையில் நல்லுணர்ச்சி பெறுவதில்லையே!

‘ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து மீள்வதுமில்லை (அதுபற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (அல் குர்ஆன் 9:126)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இறை சோதனையில் நல்லுணர்ச்சி பெறுவதில்லையே!

நபி (ஸல்) அவர்கள் உலகிற்கு வந்த நோக்கம் பற்றி..

‘அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! ஆனால் நீங்கள் புறக்கணித்தால், அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால், நீங்கள் நேர்வழி … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நபி (ஸல்) அவர்கள் உலகிற்கு வந்த நோக்கம் பற்றி..

துன்பமான வேதனைக்கு உரியவர்கள்

இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும்; எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும்; பாவமன்னிப்பு இல்லை. இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன்: 4:18)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on துன்பமான வேதனைக்கு உரியவர்கள்

இவ்வுலக வாழ்க்கையின் அற்ப சுகங்கள்

நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம். அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்). தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on இவ்வுலக வாழ்க்கையின் அற்ப சுகங்கள்

செவிதாழ்த்திக் கேட்பவருக்கான படிப்பினை பற்றி..

எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ, அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் (குர்ஆனில்) நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது. (அல்குர்ஆன்: 50:37)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on செவிதாழ்த்திக் கேட்பவருக்கான படிப்பினை பற்றி..

நமது செயல்கள், நுணுக்கமாக கண்கானிக்கப்படுவது பற்றி..

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன்: 50:16)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on நமது செயல்கள், நுணுக்கமாக கண்கானிக்கப்படுவது பற்றி..

உலகம் ஒரு பரிட்சைக் கூடம் என்பது பற்றி..

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 21:35)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on உலகம் ஒரு பரிட்சைக் கூடம் என்பது பற்றி..

உலகை நாடுவோர்க்கு உலகிலேயே வழங்கப்படுவது பற்றி..

எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப் பட்டவராகவும் நுழைவார். (அல்குர்ஆன்: 17:18)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on உலகை நாடுவோர்க்கு உலகிலேயே வழங்கப்படுவது பற்றி..

மூதாதையர்களின் மார்க்கம்?

ஆதி கால மதங்களில் ஊறிப் போய், தமது மூதாதையர்கள் பின்பற்றும் மார்க்கமே சரியென கூறுபவர்கள் பற்றி.. 34:43 நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை; உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்’ என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள், … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மூதாதையர்களின் மார்க்கம்?

அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே……

(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான். இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும். அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே……