Author Archives: Jafar
தாழ்ந்த குரலில் இறைவனை அழைத்தல்.
1728. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ … Continue reading
திக்ரின் சிறப்புகள்.
1724. ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் – லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று … Continue reading
அல்லாஹ்விடம் இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டுதல்.
1723. நபி (ஸல்) அவர்கள் ‘ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்” என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக. மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக புஹாரி :6389 அனஸ் (ரலி).
அல்லாஹ்வை கூட்டமாக அமர்ந்து நினைவு கூர்தல்.
1722. அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் … Continue reading
அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள் குறித்து இறைவன் கூறுவது என்ன?
கேள்வி எண்: 103) அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள் குறித்து இறைவன் கூறுவது என்ன? பதில்: சூரத்துல் அஃராப்-ல் 205 வது வசனத்தில் “(நபியே) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரக்க சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டிருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக … Continue reading
அல்லாஹ்வை நினைவு கூர்வதின் சிறப்பு.
1721. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு … Continue reading
அல்லாஹ்வைச் சந்திக்க நாடுவோரை….
1719. நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று கூறினார்கள். புஹாரி :6507 உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி). 1720. அல்லாஹ்வைத் தரிசிக்க விரும்புகிறவரை சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். எவர் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்’ என்று இறைத்தூதர் … Continue reading
நேர்ந்த துன்பத்துக்காக மரணத்தை ஆசிக்காதே.
1717. உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆகவேண்டும் என்றிருந்தால், ‘இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும் என நபி … Continue reading
அல்லாஹ்விடம் கேட்கும் துஆ.
1715. நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். ‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு” என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6338 அனஸ் (ரலி). 1716. நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ … Continue reading
அல்லாஹ்வின் திருநாமங்கள்.
1714. அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6410 அபூஹூரைரா (ரலி).