Author Archives: Jafar
பிரகாசத்தின்பால் அழைப்பு!
“ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி என நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?” “நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழியென்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?”“(அவ்வாறிருந்தும்) உங்களில் பெருந்தொகையினரை அவன் நிச்சயமாக வழிகெடுத்து விட்டான். இதனை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா?”. (36:60-62)“என் அடியார்களிடத்தில் … Continue reading
இறை நேசர்கள் (2)
வாழ்க்கையில் எப்படித்தான் சிக்கல்கள், துன்பங்கள், துயரங்கள் நேர்ந்தாலும் அவற்றிலிருந்து விடுதலை பெற அல்லாஹ் ஒருவனை மட்டும் நாட வேண்டும். எவரிடத்திலும் முஸ்லிம் தன் துயரங்களை முறையிடுதல் ஆகாது என்று குர்ஆன் விளக்கிக் காட்டுகிறது: “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றித் திருப்தியடைந்து ‘அல்லாஹ் நமக்குப் போதுமானவன், அல்லாஹ் தன் கிருபையைக் கொண்டு மேலும் அருள் … Continue reading
உலக அலங்காரம்?
(நபியே!) உம் இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை (உள்ளது உள்ளபடி) எடுத்துச் சொல்வீராக! அவனுடைய வசனங்களை மாற்றுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. மேலும், (யாருக்கு வேண்டியாவது அவற்றை நீர் மாற்றினால்) அல்லாஹ்விடமிருந்து தப்பியோடுவதற்கு எந்தப் புகலிடமும் உமக்குக் கிடைக்காது. எவர்கள் தம்முடைய இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைக்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் … Continue reading
இறை நேசர்கள்.(1)
மெய்யான இறை நேசச்செல்வர்கள் இறை நம்பிக்கையிலும், பக்தியிலும் தீர்க்கமானவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பயம் என்றும் அவர்களின் இதயங்களில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். அல்லாஹ் அல்லாத எவரையும் (அவர் நபியாகட்டும், வலியாகட்டும், ஜின்னாகட்டும்) அவர்கள் அஞ்ச மாட்டார்கள். அல்லாஹ்வின் பக்கம் மாத்திரமே இவர்கள் பக்தி செலுத்துவார்கள். உண்மைக்கு மாறாக ஷிர்க்வாத கருத்துகளுக்கு ஒருபோதும் இவர்கள் இசைய மாட்டார்கள். … Continue reading
கஃபா மனிதனைத் தாவஃப் செய்கிறதா?
புனித மக்கமாநகரில் இருக்கின்ற ஆதி இறையில்லமான கஃபத்துல்லாஹ் அப்படியே எழுந்து வந்து தன்னை (தவாஃப்) சுற்றுவது போல சில காட்சிகள், மாபெரும் அர்ஷும், அதன் மீது பெரியதொரு உருவமும் இருப்பது போலக் காணும் இன்னொரு காட்சி, யார் யாரோ வானத்தில் பறந்து செல்கிறார்கள், சிலர் அணிவகுத்து வானத்திலிருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர், இத்தகைய இன்னுமொரு … Continue reading
ஷைத்தான் தன் கூட்டாளிகளைத்தான் வழி கெடுக்கிறான்.
இங்கே முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். நபிமார்களையே ஷைத்தான் துன்புறுத்தவும், அவர்களுக்குத் தீங்குகளையும், அக்கிரமங்களையும் விளைவிக்கவும், அவர்களுடைய வணக்கவழிபாடுகளைக் கெடுத்து நாசம் பண்ணிடவும் தயாராவானானால் நபியல்லாத மற்றவர்களின் கதியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். (சாதாரணமான முஸ்லிம் மனிதனை ஷைத்தான் எப்படி ஆட்கொண்டு அடிமைப்படுத்தி விடுகிறான் என்பதைப் பகுத்துணர்ந்து பார்க்க வேண்டும்). நபியவர்கள் மனு-ஜின் இரு … Continue reading
அழிவுக்குள்ளான ஊர்களிலிருந்து நாம் பாடம் பெற்றோமா?
நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு பற்பல உதாரணங்களைக் கூறி விதவிதமாக விளக்கியுள்ளோம். ஆயினும், மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். மனிதர்களிடம் வழிகாட்டுதல் வந்தபோது அதனை ஏற்றுக் கொள்வதிலிருந்தும், தம்முடைய இறைவனிடம் பாவமன்னிப்பு கோருவதிலிருந்தும் அவர்களைத் தடுத்தது எது…? முந்தைய சமூகங்களுக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கும் ஏற்படுவதை அல்லது இறைதண்டனை தங்கள் கண்முன் வருவதை அவர்கள் … Continue reading
நாத்திகர்களிடத்தில் ஸியாரத்தின் தாத்பரியம்.
தத்துவ ஞானிகளிலுள்ள சில தஹ்ரிய்யாக்கள் (நாத்திகர்கள்) ஸியாரத்தின் போது புதுமாதிரியான ஒரு ஷிர்க்கையும் மக்களுக்கு விளக்கி காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய சித்தாந்தம் வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்தான் என்பதெல்லாம் உவமிப்புகள்தாம் உன்மையல்ல என்பதாகும்.
காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு ஸியாரத்தும் நபிகளார் மூலம் அறியப்பட்டுள்ளது. அதுவே காஃபிர்களின் கப்றை ஸியாரத் செய்வது என்பது. காஃபிர்களின் சமாதிகளை ஸியாரத் செய்வது குறித்து ஏராளமான ஹதீஸ்களை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக இமாம்களான முஸ்லிம், அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா போன்ற ஹதீஸ் அறிஞர்களின் தொகுப்புகளில் காணப்படுகின்றன.
முஸ்லிம்களின் கப்றுகளை ஸியாரத் செய்வது எப்படி?
கப்று (சமாதி) தரிசனம் என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அமைப்பாகும். அனுமதிக்கப்படாத நூதன முறையில் அனுஷ்டிக்கப்படும் அமைப்பு மற்றொன்று. இப்படி ஸியாரத் இரு வகைப்படும். ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்ட ஸியாரத்திற்கு நமது இஸ்லாம் விளக்கம் தரும்போது ‘எந்த ஸியாரத்தினால் ஸியாரத் செய்கிறவனின் எண்ணம் கப்றாளிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்’ என்று அமைகிறதோ அதுவே ஷரீஅத்தில் அனுமதிக்கப்படுகிற ஸியாரத்தாகும். மனிதன் இறந்ததன் … Continue reading