Author Archives: Jafar
அனைத்தும் சோதனையே!
அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சிலரை விடப் பதவிகளில் உயர்த்தினான் – நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன். (அல்குர்ஆன்: 6:165)
நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை!
122- ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்து விட்டனர். அல்லது ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப்) பிரார்த்தனை உண்டு. அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டு விட்டனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய வைத்துள்ளேன் என … Continue reading
உபதேசம் யாருக்கு பயனளிக்கும்?
“நாம் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பயனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன்: 11:34)
தூதர்கள் எதற்காக வந்தார்கள்?
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:165)
அல்லாஹ் நாடினால்……..
121- ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தவருக்காகப் பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பெற்ற) ஒரு பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் என் பிரார்த்தனையை மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரைக்க பத்திரப்படுத்தி வைக்க நான் விரும்புகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-7474: அபூஹூரைரா(ரலி)
1. இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?
இறைநேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், ‘நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையல்லவா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அதுபோல் தான் நாங்களும் இறைவனிடம் எங்களுக்காக … Continue reading
சத்தியம், ஈமான் இவற்றை நிராகரித்தால்…
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்) தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்குர்ஆன்: 4:170)
இறைவனிடம் பரிந்துரைக்கு தகுதியானவர்!
120- ஠லà¯à®²à®¾à®¹à¯à®µà®¿à®©à¯ தà¯à®¤à®°à¯ நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ (à®à®°à¯ விரà¯à®¨à¯à®¤à®¿à®²à¯) à®à®±à¯à®à¯à®à®¿ à®à¯à®£à¯à®à¯ வரபà¯à®ªà®à¯à®à®¤à¯. ஠பà¯à®ªà¯à®¤à¯ (à®à®®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®) பà¯à®à®®à¯ (à®®à¯à®©à¯à®à®¾à®²à¯ à®à®ªà¯à®ªà¯) à®à®©à¯à®±à¯ ஠வரà¯à®à®³à®¿à®à®®à¯ நà¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯. ஠த௠஠வரà¯à®à®³à¯à®à¯à®à¯ மிà®à®µà¯à®®à¯ பிà®à®¿à®¤à¯à®¤à®®à®¾à®©à®¤à®¾à® à®à®°à¯à®¨à¯à®¤à¯ வநà¯à®¤à®¤à¯. நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯ (஠தà¯) வாயாலà¯à®¯à¯ (பறà¯à®à®³à®¾à®²à¯) பறà¯à®±à®¿à®à¯ à®à¯à®£à¯à®à¯ ஠திலிரà¯à®¨à¯à®¤à¯ à®à®¿à®±à®¿à®¤à¯ à®à®£à¯à®à®¾à®°à¯à®à®³à¯. பிறà®à¯ நான௠மறà¯à®®à¯ நாளில௠… Continue reading
லாஇலாஹ இல்லல்லாஹ்!
119- அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று (இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைச் செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் … Continue reading
அல்லாஹ் அவர்களை அழிப்பானாக!
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் மஸீஹை (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பபபடுகிறார்கள்? (அல்குர்ஆன்: 9:30)