இறைநேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு
அனைத்துப்புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அவனது சாந்தியும், சமாதானமும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், மற்ரும் அனைத்து முஸ்லிம்கள் மீதும் உண்டாவதாக! ஆமீன்!!
பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார்களையும், ஷெய்குமார்களையும், பீர்களையும், அவ்லியாக்களையும், இறை நேசர்களையும் பிரார்த்திப்பவர்கள் பின்வரும் காரணங்களில் சிலவற்றையோ அல்லது ஏதேனும் ஒரு காரணத்தையோ கூறுவர்.
1. நீதிபதியிடம் வாதாடுவதற்காக ஒரு வக்கீல் தேவையல்லவா? அதுபோல் நாங்கள் அவ்லியாக்களிடம் அல்லாஹ்விடம் வாதாடுவதற்காக முறையிடுகிறோம்.
2. நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து கேட்கிறோம்.
3. நாங்கள் பாவம் செய்த பாவிகளாக இருக்கின்றோம். அதனால் பாவமே செய்யாத இறைவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் எங்களுக்காக அவனிடம் எங்களின் தேவைகளைக் கேட்டு பெற்றுத் தருவார்கள்.
4. மார்க்கத்தில் சிறிதளவு விபரமுள்ள இன்னும் சிலர் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை; மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர்.
5. நாங்கள் ஒன்றும் புதிதாக இதைச் செய்யவில்லை. எங்கள் முன்னோர்களும், மூதாதையர்களும் அவ்லியாக்களிடம் முறையிட்டுத்தானே தேவைகளைப் பெற்று வந்தார்கள்.அவர்கள் என்ன ஒன்றும் விளங்காதவர்களா?
6. எங்கள் ஆலிம்களும் மற்றும் ஹஜ்ரத்மார்களும் இதைச் செய்கிறார்களே, அவர்களும் தவறு செய்கிறார்களா?
அல்லாஹ் தன் திருமறையில் அவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும், அவனிடமே உதவி தேட வேண்டும் என்றும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்க கப்று வணக்க முறைகளை ஆதரிப்போர் எடுத்து வைக்கும் மேற்கூறப்பட்ட வாதங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஆராய்வோம்.
ஆய்வு தொடரும்.