வஹ்ஹாபி என்பதன் அர்த்தம்

தௌஹீதின் எதிரிகள் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களைச் சம்பந்தப்படுத்தி தௌஹீதுடைய அடிப்படையில் இருப்பவனுக்கு ‘வஹ்ஹாபி’ என்று சொல்கின்றனர். இவர்கள் உண்மை சொல்லுகின்றவர்களாக இருந்தால் அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முஹம்மதைச் சம்பந்தப்படுத்தி ‘முஹம்மதி’ (முஹம்மதைச் சேர்ந்தவன்) என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். (அவ்வாறு சொல்லியிருந்தால் முஹம்மத் (ஸல்) அவர்களைச் சார்ந்தவன் என்று கருத்துக் கொள்ள இடமேற்பட்டு விடும் என்று எதிரிகள் அஞ்சியிருக்கலாம்.)

‘அல்வஹ்ஹாப்’ என்ற அஸ்மாஉல் ஹுஸ்னாவிலுள்ள அல்லாஹ்வின் பெயரை இவர்கள் சம்பந்தப்படுத்தி ‘வஹ்ஹாபி’ என்று பெயர் சூட்டப்பட வேண்டுமென அல்லாஹ் விரும்பியிருக்கிறான்.

‘அல்வஹ்ஹாப்’ என்பதற்கு அதிகம் கொடை கொடுப்பவன் என்று பொருள்படும். அது அல்லாஹ்வுக்குரிய அழகிய பெயர்களில் ஒன்றாகும். ‘வஹ்ஹாபி’ என்றால் கொடையாளனாகிய அல்லாஹ்வைச் சார்ந்தவன் என்று பொருள்படும். (ஷிர்க்கு, பித்அத்துக்கெதிராக புரட்சி செய்தவர் முஹம்மத் என்பவர் தான். இவருடைய தந்தையின் பெயர் அப்துல் வஹ்ஹாப் என்பதாகும். இப்பெயரின் அர்த்தம் அல்வஹ்ஹாப் என்ற அல்லாஹ்வின் அடிமை என்பதாகும்.

கம்பளித்துணிக்கு ‘ஸூப்’ என்று அரபியில் சொல்லப்படும். கம்பளித்துணியை அணிகின்றவனுக்கு ‘ஸூபி’ என்று சொல்லப்படும். ஏழ்மையுடன் இப்படியான துணியுடனிருக்கும் ஒரு கூட்டத்துக்கே ‘ஸூபிகள்’ என்று வழங்கப்படலாயிற்று.

எனவே நிச்சயமாக ‘வஹ்ஹாபி’ என்ற சொல் அல்வஹ்ஹாப் என்ற அல்லாஹ்வுடைய பெயருடன் தொடர்பு படுகின்றது. அந்த அல்லாஹ் தான் இவனுக்கு தௌஹீதைக் கொடையாக அருளி, அதன்பால் மக்களை அழைக்கக் கூடியதாகவும் வாய்ப்பை ஏற்படுத்தினான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.