Tag Archives: வேறுபாடு
அத்தியாயம்-3 தொழுகையை நிறைவேற்றுதல்.
ஒளு, பாங்கு, இகாமத் ஆகியவை முடிந்தவுடன் தொழுகை பின்வருமாறு தொடங்குகின்றது. 1. பஜ்ருத் தொழுகை இந்தத் தொழுகையில் சுன்னத் தொழுகையாக இரண்டு ரக்அத்களும் பின்னர் பர்ளுத் தொழுகையாக (கட்டாயத் தொழுகையாக) இரண்டு ரக்அத்களும் தொழ வேண்டும். தொழும் முறைகள் இரண்டிற்குமே ஒன்றுதான். நிய்யத் வைப்பதில் மட்டுமே வேறுபாடு உள்ளது. தொழுகையின் முறைகள் பின்வருமாறு:
அத்தியாயம்-3 தொழுகை அழைப்பு (அதான்)-பாங்கு
பெருமானார் (ஸல்) அவர்களின் போதனைகளின்படி தொழுகை நேரம் வந்தவுடன் தொழுகைக்கான அழைப்பு விடுப்பது சிறந்ததாகும். தொழுகைக்கான அழைப்பை விடுப்பவர், கிப்லாவை (மக்காவிலுள்ள கஅபாவை நோக்கி) நின்று கொண்டு தனது இரு கரங்களையும் தம் செவிகள் வரை உயர்த்தி உரத்த குரலில் பின்வருமாறு முழங்குதல் வேண்டும்.