Tag Archives: வேண்டுதல்
80. பிரார்த்தனைகள்
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6304 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6305 … Continue reading
இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஏன் சத்தியம் செய்ய வேண்டும்
அல்லாஹ் தன் சிருஷ்டிகளில் விரும்பியவற்றைக் கொண்டு மனிதர்களிடம் சத்தியம் செய்கிறான். மனிதர்களைப் பொறுத்தவரை சிருஷ்டிகளைக் கொண்டு மற்றொரு சிருஷ்டியிடம் அனுமதிக்கப்படாதது போல அவற்றைக் கொண்டு இறைவனிடத்திலும் சத்தியம் செய்வதில் ஷிர்க் நுழைந்து விடுகிறது. அல்லாஹ் தன் சிருஷ்டிகளைப் பாராட்டி அவற்றின் கௌரவத்தையும், அமைப்பையும், அவற்றைப் படைத்தல் இலேசான காரியமல்ல என்பவற்றையெல்லாம் எடுத்துக் கூறி அதன் காரணத்தினால் … Continue reading
மறைமுகமான பிரார்த்தனை
பார்வைக்கப்பால் இருப்பவர்கள் ஒருவர் இன்னொருவருக்கு வேண்டிக் கேட்கின்ற பிரார்த்தனைகள் முன்னிலையில் அவ்வாறு கேட்பதைக் காட்டிலும் இறைவனிடம் மிக்க ஏற்புடையதாகும். ஏனெனில் அது தூய எண்ணம் கொண்டு பிரார்த்திக்கும் துஆ அல்லவா? கலப்பற்ற எண்ணத்தால் பார்வைக்கப்பால் இருந்து ஒருவனுக்கு துஆ செய்யும்போது, அதன் தூய்மையையும், மதிப்பையும் அளவிட முடியாதல்லவா? சாதாரணமாக அல்லாஹ்விடம் துஆச் செய்பவரோடு சேர்ந்து மறைமுகமாகப் … Continue reading
வினாவும் விடையும்
வினா: இஸ்லாமிய மார்க்கத்தின் இமாம்களான அறிஞர்களிடம் கீழ்வரும் மஸ்அலா பற்றி கேட்கப்படுகிறது. அதாவது நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு வஸீலா தேடி அவர்களிடம் ஷபாஅத்தை வேண்டுவதில் அனுமதிக்கப்பட்டதும், அனுமதிக்கப்படாததுமான முறைகளையும், அதன் விதிகளையும் விளக்க வேண்டும்.
பார்வையிழந்த ஸஹாபியைப் பற்றிய ஹதீஸ்
இந்த ஹதீஸை இமாம் திர்மிதியும், நஸாயீயும் அறிவிக்கிறார்கள். ‘நபிகளின் துஆவை வைத்து பிரார்த்தித்தல்’ என்ற இனத்தைச் சார்ந்த ஹதீஸாக இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது. கண்பார்வை இழந்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து தமக்காகப் பிரார்த்தித்து தமது பார்வையை மீட்டுத்தர அல்லாஹ்வை வேண்டும்படி கேட்டுக்கொண்டார். இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரை நோக்கி ‘நீர் விரும்பினால் … Continue reading
படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (2)
அதிய்யத்துல் ஊபி (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் வருகிறது: தொழுகைக்கு புறப்படும் ஒரு மனிதனுக்கு நபியவர்கள் கீழ்வரும் பிரார்த்தனையை சொல்ல வேண்டுமென்று கற்றுக் கொடுத்தார்கள். ‘இறைவா! உன்னிடம் பிரார்த்திப்பவர்களுக்காக உன் மீதுள்ள பாத்யதையை (ஹக்கைப்) பொருட்டாக வைத்துக் கேட்கிறேன். இதோ நான் நடந்து செல்லும் பாதையின் … Continue reading