Tag Archives: நற்குணம்
அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (1)
மனிதனின் சமுதாய வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை ஆகியவற்றைப் போலவே மனிதனின் அரசியல் வாழ்வையும் இஸ்லாம் சில உயர்ந்த ஒழுக்க, ஆன்மீக அடிப்படைகளின் கீழ் அமைத்துத் தருகின்றது. வாழ்வின் ஏனையத் துறைகளைப்போலவே இதற்கும் தெளிவான இறைக்கட்டளைகள் இருக்கவே செய்கின்றன. இந்த இறைக்கட்டளைகளின் படியே ஒரு முஸ்லிமின் அரசியல் வாழ்க்கை அமைக்கப்பட வேண்டும்.
அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (1)
இஸ்லாத்தில் மனிதனின் பொருளாதார வாழ்வு, உறுதியான அடிப்படை, தெளிவான இறைவழி காட்டுதல் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தனது வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையானவற்றை நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது ஒருவனின் கடமை என்பது மட்டுமல்ல, மாட்சிமைமிக்க சிறந்த நற்குணமுமாகும். உழைத்திடும் திறன் இருந்தும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் அடுத்தவர்களை அண்டிப் பிழைத்திடுவது மார்க்கத்தின் பார்வையில் மிகப்பெரிய பாவமாகும். … Continue reading
அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.
இஸ்லாம் தரும் ஒழுக்கக் கொள்கைகள் சில அடிப்படை நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் சில: 1). இறைவன் படைத்தவன், அவனே நன்மைகளின் பிறப்பிடம். அவனே உண்மையின் இருப்பிடம். அழகும் அழகிய கலையும் அவனே! 2). மனிதன், இறைவனின் பொறுப்பு மிகுந்த பிரதிநிதி ஆவான்.
அத்தியாயம்-2 இஸ்லாம் அமைத்துத்தரும் சமுதாயம்.
சமுதாயம் என்ற சொல்லுக்கு மிக விரிந்த விளக்கங்கள் உண்டு. நாம் சமுதாய அமைப்பின் அடிப்படைகளையே இங்கே எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம். ஆகவே சமுதாய அமைப்பின் அடிப்படைகளை மட்டும் எடுத்துச் சொல்லும் சில இலக்கணங்களை மட்டுமே இங்கே தருகின்றோம் சமுதாயம் என்பது எல்லாவகையான உறவுகளையும் உள்ளடக்கியதாகும். அது தனி மனிதர்களுக்கிடையே ஏற்படும் அந்தரங்கமான உறவுகள், உணர்வுகள், ஒழுக்கக் … Continue reading
நறுமணம் மிக்க நபிகளார் (ஸல்) அவர்கள்.
1503. நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை. நபி (ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை. புஹாரி : 3561 அனஸ் (ரலி). 1504. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக … Continue reading
நற்குணங்கள்.
1501.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் கறுப்பு நிற அடிமையான அன்ஜஷா எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டுப்பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து) கொண்டிருந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உமக்கு நாசம்தான் (வைஹக்க). அன்ஜஷா! நிதானம்! (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!” என்று கூறினார்கள். புஹாரி :6161 அனஸ் … Continue reading
நபி(ஸல்) அவர்கள் அதிக வெட்க சுபாவம் உள்ளவர்கள்.
1499. நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். புஹாரி :3562 அபூஸயீத் அல் குத்ரி (ரலி). 1500. நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ‘உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே” என்று அவர்கள் கூறுவார்கள். புஹாரி :3559 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).