Tag Archives: திட்டம்
அத்தியாயம்-4. A. தனிமனிதனின் தனிவாழ்வு.
இஸ்லாம் மனிதனின் தனிவாழ்க்கைத் தூய்மை நிறைந்த ஒன்றாக இருந்திட வேண்டும் என விழைகின்றது. இந்த விதத்திலேயே தனது போதனைகளை அமைத்துத் தருகின்றது. மனிதன் ஆரோக்கியம் நிறைந்தவனாக இருந்திட, அவனுக்கு மிகவும் ஆரோக்கியமானதொரு உணவு திட்டத்தை அமைத்துத் தந்துள்ளது. தனிமனிதனின் ஒழுக்கம் மாசுபடாமல் இருந்திட, அவன் எவ்வாறு ஆடை அணிந்திட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுகின்றது. அவன் … Continue reading
அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)
நோன்பு, இஸ்லாத்திற்கே உரிய ஒழுக்க, ஆன்மீக தனித்தன்மைகளுள் ஒன்றாகும். வைகறை வரும் முன் ஆரம்பித்து, சூரியன் அடையும்வரை உணவு, பானம், உடலுறவு இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விலகி இருத்தலே நோன்பாகும். இது ரமளான் மாதம் முழுவதும் நோற்கப்படுவதாகும். இஸ்லாம், கடமையாக்கியுள்ள நோன்பிற்கு பல பரந்த பொருள்களுண்டு. அதனுடைய நோக்கமும் மிகவும் விரிவானதாகும்.
அத்தியாயம்-3 தொழுகையின் நிபந்தனைகள்
தொழுகை முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்: 1. புத்தி சுவாதீனமுள்ளவர்கள் அனைவரும் தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். 2. ஓரளவுக்கு மனப்பக்குவம் அடைந்தவரும், வயதுக்கு வந்தவர்களும் (பொதுவாக பதினான்கு வயது) தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். குழந்தைகள் ஏழு வயதை அடைந்தவுடன் தொழும்படி பெற்றோர்கள் அறிவுரை கூற வேண்டும். பத்து வயதை அடைந்தவுடன் அதனை … Continue reading
அத்தியாயம்-1. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! அல்லாஹ் (இறைவன்)
இறைவனைப் பற்றிய அறிவும், அவன் மீது வைக்கப்படும் நம்பிக்கையுமே இஸ்லாத்தின் அடிப்படைகளாக அமைகின்றன. இஃது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே இதனை தெளிவுபடுத்திட முழுமையானதொரு விவாதம் தேவைப்படுகின்றது. இங்கே சில எளிய எடுத்துக்காட்டுகள் தரப்படுகின்றன. நாம் விவாதத்திற்காக எடுத்துக்கொண்ட பொருள்பற்றி ஏற்கனவே அறிந்தவர்களுக்கு இது மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம். இவர்களை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். … Continue reading