Tag Archives: கண்டிப்பு
கொலைகள் செய்தவர் தவ்பா அங்கீகரிக்கப் படுதல்.
1760. பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, ‘(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?’ என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், ‘கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் … Continue reading
எறும்புகளைக் கொல்லத் தடை.
1445. இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே” என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான் … Continue reading
அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உதவி தேடினார்களா?
அறிஞர் தபரானி தமது ‘முஃஜமுல் கபீர்’ என்ற நூலில் ‘ஒரு நயவஞ்சகன் மூமின்களுக்கு கெடுதிகள் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) மூமின்களை நோக்கி, வாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் செல்வோம். இந்த நயவஞ்சகனின் தொல்லையிலிருந்து தப்பிக்க நபிகளைக் கொண்டு உதவித் தேடுவோம்’ என்றார்களாம். இதற்கு நபி (ஸல்) … Continue reading
மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.
மேன்மைக்குரிய மாபெரும் சிருஷ்டிகளில் நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு மட்டும் சத்தியம் செய்யலாம் என்றும், பிரார்த்திக்கலாம் என்றும் அனுமதிக்கின்றோமே தவிர எல்லா மக்களையும், அல்லது எல்லா படைப்புகளையும் கொண்டு அவர்களின் பொருட்டால் பிரார்த்திப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லையே – இது சிருஷ்டிகளில் ஸாலிஹீன்களையும், நபிமார்களையும் கொண்டு பிரார்த்திப்பதை அனுமதித்தவர்களின் வாதமாகும்.
ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.
ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.
நபிகள் (ஸல்) அவர்கள் எல்லா மக்களுக்கும் பரிந்து பேசி அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும் அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும், அந்தஸ்திலும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாவார்கள். அவர்களின் அந்தஸ்தின் அருகில் எந்த நபிகளும், எந்த ரசூலும் நெருங்க முடியாது. இவர்கள் அல்லாஹ்விடம் எல்லோரையும் … Continue reading
பாடம் – 6
நோய்கள், துன்பங்களில் இருந்து பாதுகாப்பு அல்லது நிவாரணம் நாடி மோதிரம், நூல் போன்றவைகளை அணிவது ஷிர்க்காகும். ‘அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால் அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக் கூடியவையா? அல்லது ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால் அவனுடைய அருளை அவை தடுத்துவிடக் … Continue reading