Tag Archives: ஊக்கம்
அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (1)
இஸ்லாத்தில் மனிதனின் பொருளாதார வாழ்வு, உறுதியான அடிப்படை, தெளிவான இறைவழி காட்டுதல் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தனது வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையானவற்றை நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது ஒருவனின் கடமை என்பது மட்டுமல்ல, மாட்சிமைமிக்க சிறந்த நற்குணமுமாகும். உழைத்திடும் திறன் இருந்தும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் அடுத்தவர்களை அண்டிப் பிழைத்திடுவது மார்க்கத்தின் பார்வையில் மிகப்பெரிய பாவமாகும். … Continue reading
அத்தியாயம்-4. A. தனிமனிதனின் தனிவாழ்வு.
இஸ்லாம் மனிதனின் தனிவாழ்க்கைத் தூய்மை நிறைந்த ஒன்றாக இருந்திட வேண்டும் என விழைகின்றது. இந்த விதத்திலேயே தனது போதனைகளை அமைத்துத் தருகின்றது. மனிதன் ஆரோக்கியம் நிறைந்தவனாக இருந்திட, அவனுக்கு மிகவும் ஆரோக்கியமானதொரு உணவு திட்டத்தை அமைத்துத் தந்துள்ளது. தனிமனிதனின் ஒழுக்கம் மாசுபடாமல் இருந்திட, அவன் எவ்வாறு ஆடை அணிந்திட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுகின்றது. அவன் … Continue reading
அத்தியாயம்-3 ஜகாத்.
ஜகாத் என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகும். இது பல தனித்தன்மைகளைத் தன்னகத்தே கொண்ட ஓர் அரிய அமைப்பாகும். திருக்குர்ஆனில் வரும் ‘ஜகாத்’ என்ற சொல்லின் முழுப்பொருளையும் வெளிப்படுத்தும் ஒரே தமிழ்ச்சொல் இல்லை. இதுபோலவே இதன் முழுப்பொருளையும் உணர்த்தும் ஒரே சொல் வேறு மொழிகளிலும் இல்லை. தர்மம், கொடை, இனாம், அன்பளிப்பு, வரி என்ற … Continue reading
அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-1)
உண்மையான முஸ்லிம் ஒருவர் பின்வருவனவற்றை நம்புகிறார். 1. இறைவன் ஒருவனே. அவன் மேலானவன், நிரந்தரமானவன், முடிவற்றவன், வல்லவன், கருணையுள்ளவன், அளவற்ற அன்புடையவன், படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன். இவற்றை ஒரு முஸ்லிம் பரிபூரண நம்பிக்கைக் கொள்கிறார். இந்த நம்பிக்கை உறுதிபெற இறைவனையே முழுமையாக நம்பியிருக்க வேண்டும். அவனிடமே தஞ்சம் புக வேண்டும். அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்திட வேண்டும். … Continue reading
கஃபா மனிதனைத் தாவஃப் செய்கிறதா?
புனித மக்கமாநகரில் இருக்கின்ற ஆதி இறையில்லமான கஃபத்துல்லாஹ் அப்படியே எழுந்து வந்து தன்னை (தவாஃப்) சுற்றுவது போல சில காட்சிகள், மாபெரும் அர்ஷும், அதன் மீது பெரியதொரு உருவமும் இருப்பது போலக் காணும் இன்னொரு காட்சி, யார் யாரோ வானத்தில் பறந்து செல்கிறார்கள், சிலர் அணிவகுத்து வானத்திலிருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர், இத்தகைய இன்னுமொரு … Continue reading