Tag Archives: உற்சாகம்
அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (2)
சுட்டெரிக்கும் பாலைப் பெருவெளியில் இருண்டு கிடந்த அரேபியாவிலிருந்து கிளர்ந்தெழுந்து ரோம், பாரசீகம், இன்னும் ஐரோப்பா போன்ற பெருநில வெளிகளிலெல்லாம் அறிவுக்கதிர் சிந்திய அரேபியர்களைப் போர்வெறியர்கள் என வர்ணிக்கின்ற ‘மேதை’களும் வாழத்தான் செய்கின்றார்கள். இந்த ‘மேதை’களில் சிலர் இஸ்லாத்திற்கு எதிராக தங்களது பேனா முனைகளை ஓட்டியபோது, ’இஸ்லாம் தந்த உற்சாகத்தால் முஸ்லிம்கள் தங்களால் முடிந்தவரை வாளால் மதம் … Continue reading
அத்தியாயம்-4 நித்திய வாழ்க்கையில் இஸ்லாத்தை செயல்படுத்தும் முறை.
இஸ்லாம் ஒரு வெற்றுத் தத்துவமல்ல. தேவைபடும்போது புகழாரங்களைச் சூட்டி அழகு பார்த்துவிட்டுப் புறக்கணித்திடக்கூடிய ஓட்டைச் சித்தாந்தமுமில்லை. ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை இந்த கண்ணோட்டத்தில் அணுகிடுவதுமில்லை. நமது வாழ்க்கையில் நாளும் நடைமுறைப்படுத்தி நன்மையடைந்திட வேண்டிய நிறைவான வாழ்க்கை வழிகாட்டியே இஸ்லாம்.
அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)
நோன்பு, இஸ்லாத்திற்கே உரிய ஒழுக்க, ஆன்மீக தனித்தன்மைகளுள் ஒன்றாகும். வைகறை வரும் முன் ஆரம்பித்து, சூரியன் அடையும்வரை உணவு, பானம், உடலுறவு இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விலகி இருத்தலே நோன்பாகும். இது ரமளான் மாதம் முழுவதும் நோற்கப்படுவதாகும். இஸ்லாம், கடமையாக்கியுள்ள நோன்பிற்கு பல பரந்த பொருள்களுண்டு. அதனுடைய நோக்கமும் மிகவும் விரிவானதாகும்.
பாங்கின் பிரார்த்தனை!
நபிகள் (ஸல்) அவர்கள் தமது உம்மத்துகளிடம் ஸலவாத்துச் சொல்லக் கூறியிருப்பதுபோல தமக்காக வஸீலாவையும், பளீலாவையும், புகழுக்குரிய இடத்தையும் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படியும் ஏவியிருக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் முஅத்தின் சொல்வதைப் போன்று நீங்களும் சொல்லுங்கள். பிறகு … Continue reading