Tag Archives: உபதேசம்
அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.
இஸ்லாம் தரும் ஒழுக்கக் கொள்கைகள் சில அடிப்படை நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் சில: 1). இறைவன் படைத்தவன், அவனே நன்மைகளின் பிறப்பிடம். அவனே உண்மையின் இருப்பிடம். அழகும் அழகிய கலையும் அவனே! 2). மனிதன், இறைவனின் பொறுப்பு மிகுந்த பிரதிநிதி ஆவான்.
93. நீதியும் நிர்வாகமும்
பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7137 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 7, அத்தியாயம் … Continue reading
பிரார்த்தனையின் படித்தரங்கள் (2)
முந்தைய நபிமார்களின் ஷரீஅத்துக்களிலும் ஷிர்க் அனுமதிக்கப் படவில்லை. இறைவனுக்கு இணைவைத்தல் என்பது நபி (ஸல்) அவர்கள் மட்டும் விலக்கிய ஒரு பாவமல்ல. மாறாக அனைத்து நபிமார்களும் தம் ஷரீஅத்துகளில் இத்தகைய ஷிர்க்குகள் பரவுவதைத் தடுத்தார்கள். இறந்துப் போனவர்களைக் கூப்பிட்டு பிரார்த்திக்காதீர்கள் என்றும், ஷிர்க்கான அனுஷ்டானங்களைச் செய்யாதீர்கள் என்றும் நபி மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களைத் … Continue reading
பிரார்த்தனையின் படித்தரங்கள் (1)
இஸ்லாமிய அறிஞர்களும், இமாம்களும் ஷரீஅத்தில் ஆகுமானதும், ஆகாதவையுமான பிரார்த்தனைகளை வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கூடாத, பித்அத்தான பிரார்த்தனைகளை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று: அல்லாஹ் அல்லாத இதர சிருஷ்டிகளை அழைத்துப் பிரார்த்தித்தல். மய்யித்திடம் கேட்டுப் பிரார்த்தித்தல். கண் பார்வைக்கு அப்பாற்பட்டோர், இறந்து போன நபிமார்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரையெல்லாம் கூப்பிட்டு ‘யாஸய்யிதீ! எனக்கு உதவி செய்தருள்வீர்! உங்களைக் கொண்டு காவல் … Continue reading
மூல நூலாசிரியரின் வரலாறு – ஆசிரியர் முகவுரை!
இந்நூலின் மூல ஆசிரியரான ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு மாபெரும் மார்க்க மேதையும் சீர்திருத்தவாதியுமான அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா என்பவர் ஹிஜ்ரி 661-ஆண்டு ரபீவுல் அவ்வல் 10(கி.பி 1263 ஜனவரி 22 ஆம் நாள்)சிரியாவில் ஹர்ரான் என்ற ஊரில் பிறந்தார். தந்தை ஷிஹாபுத்தீன் அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா … Continue reading