Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

பெருமைக்காக ஆடையை கரண்டைக்கு கீழ் உடுத்தல்.

1349. நபி (ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள். புஹாரி : 5784 இப்னு உமர் (ரலி). 1350. கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on பெருமைக்காக ஆடையை கரண்டைக்கு கீழ் உடுத்தல்.

மென்பட்டு விரிப்புகள் உபயோகிக்கலாம்.

1348. ”(எனக்குத் திருமணம் ஆன பொழுது) உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கின்றனவா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘எங்களிடம் எப்படி அந்த விரிப்புகள் இருக்கும்?’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள். (பின்னர் ஒரு நாளில்) நான் (என் மனைவியான) அவரிடம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on மென்பட்டு விரிப்புகள் உபயோகிக்கலாம்.

ஒட்டுப் போட்ட ஆடைகளை அணிதல்.

1347. ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக்காட்டி, ‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்றார்கள். புஹாரி : 5818 அபூபுர்தா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on ஒட்டுப் போட்ட ஆடைகளை அணிதல்.

பருத்தியாலான சால்வை அணிவதின் சிறப்பு.

1346. நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘எந்த ஆடை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை” என்று பதிலளித்தார்கள். புஹாரி : 5812 அனஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on பருத்தியாலான சால்வை அணிவதின் சிறப்பு.

தோல்நோயாளிகளுக்கு பட்டாடை அணிய அனுமதி.

1345. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். புஹாரி : 2919 அனஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on தோல்நோயாளிகளுக்கு பட்டாடை அணிய அனுமதி.

தங்க ஆபரணங்கள் அணிய ஆண்களுக்குத் தடை.

1338. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள். நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் -எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும், விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், சலாம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on தங்க ஆபரணங்கள் அணிய ஆண்களுக்குத் தடை.

தங்க வெள்ளிப் பாத்திரங்களை உண்ண பருக உபயோகிக்கத் தடை.

ஆடை அணிகலன்கள். 1337. வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் நரக நெருப்பையே விழுங்கி நிரப்புகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5634 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலி) .

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on தங்க வெள்ளிப் பாத்திரங்களை உண்ண பருக உபயோகிக்கத் தடை.

எந்த உணவையும் குறை கூறாதே..

1336. நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டு விடுவார்கள். புஹாரி : 3563 அபூஹூரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on எந்த உணவையும் குறை கூறாதே..

இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் உண்ணுகிறான்.

1334. இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; ‘இறைமறுப்பாளன்’ அல்லது ‘நயவஞ்சகன்’ ஏழு குடல்களில் சாப்பிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5394 இப்னு உமர்(ரலி). 1335. ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராகிவிட்டார். இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘இறைநம்பிக்கையாளர் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் உண்ணுகிறான்.

இருவரின் உணவு மூவருக்குப் போதுமானது.

1333. இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5392 அபூ ஹுரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on இருவரின் உணவு மூவருக்குப் போதுமானது.