Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

ஒருவரின் வீட்டுக்குள் நுழையும் முன்பு அனுமதி கோருதல்.

1391. நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூ மூஸா (ரலி) அவர்கள் வந்து, ‘நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஒருவரின் வீட்டுக்குள் நுழையும் முன்பு அனுமதி கோருதல்.

பயபக்தியாளரிடம் தன் பிள்ளைக்கு பெயர் வைத்தல்.

1386. (என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா (ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூதல்ஹா (ரலி) திரும்பி வந்தபோது ‘என் மகன் என்ன ஆனான்?’ என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on பயபக்தியாளரிடம் தன் பிள்ளைக்கு பெயர் வைத்தல்.

அரசனுக்கு அரசன் என்று எவரையும் அழைக்காதே.

1385. மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்கு ‘மன்னாதி மன்னன்’ (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6205 அபூஹூரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on அரசனுக்கு அரசன் என்று எவரையும் அழைக்காதே.

கெட்ட பெயர்களை நல்ல பெயராக மாற்றுதல்.

1384. ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது ‘அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. எனவே, அவருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸைனப்’ என்று பெயர் சூட்டினார்கள். புஹாரி 6192 அபூஹூரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on கெட்ட பெயர்களை நல்ல பெயராக மாற்றுதல்.

நபியின் குறிப்புப் பெயரைச் சூட்டாதே.

நல்லொழுக்கங்கள். 1380. ஒருவர் பகீஃ எனுமிடத்தில் ‘அபுல் காஸிமே!’ என்று அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பியபோது ‘உங்களை அழைக்கவில்லை’ என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். என் குன்யத்தை (‘அபுல்காஸிம்’ என்னும் என்னுடைய குறிப்புப் பெயரை) சூட்டிக் கொள்ளாதீர்கள்!” என்றார்கள். புஹாரி : 2121 அனஸ் (ரலி). … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on நபியின் குறிப்புப் பெயரைச் சூட்டாதே.

செய்யாத ஒன்றை செய்ததாக கூறுதல்.

1379. ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக் கொண்டால், அது குற்றமாகுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘கிடைக்கப் பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக் கொள்கிறவர், போலியான இரண்டு ஆடைகளை … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on செய்யாத ஒன்றை செய்ததாக கூறுதல்.

சவுரி முடி செயற்கை சிங்காரங்கள் பற்றி.

1375. ஒரு பெண் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் என் மகளுக்கு மணமுடித்து வைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார். எனவே, அவளுடைய தலையில் நான் ஒட்டுமுடி வைத்து விடட்டுமா?’ என்று கேட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on சவுரி முடி செயற்கை சிங்காரங்கள் பற்றி.

சாலையில் தடை ஏற்படுத்தாதே.

1374. ”நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on சாலையில் தடை ஏற்படுத்தாதே.

அரைகுறை தலை மழித்தலுக்குத் தடை.

1373. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள். புஹாரி : 5921 இப்னு உமர் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on அரைகுறை தலை மழித்தலுக்குத் தடை.

கால் நடைகள் முகத்தில் அடையாளமிடாதே.

1372. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள் ‘அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனுடைய வாயிலிடுவதற்காக இவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்லும்வரை இவன் எதையும் சாப்பிட்டுவிட வேண்டாம்” என்றார்கள். அவ்வாறே நான் அவனை நபி (ஸல்) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on கால் நடைகள் முகத்தில் அடையாளமிடாதே.