Monthly Archives: May 2008

கண்ணுக்கு மருந்தாகும் சமையல் காளான்.

1328. சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 4478 ஸயீத் இப்னு ஸைத் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on கண்ணுக்கு மருந்தாகும் சமையல் காளான்.

அல்லாஹ்வுக்கு உவப்பான செயல்களின் பால் இட்டுச்செல்லும் உறுதியான ஈமான்!

23:1. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். 23:2. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். 23:3. இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். 25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள். … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Tagged , , | Comments Off on அல்லாஹ்வுக்கு உவப்பான செயல்களின் பால் இட்டுச்செல்லும் உறுதியான ஈமான்!

மதீனத்துப் பேரீத்தங்கனிகளின் சிறப்பு.

1327. தினந்தோறும் காலையில் சில ‘அஜ்வா’ ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5768 ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on மதீனத்துப் பேரீத்தங்கனிகளின் சிறப்பு.

தடுக்கப்பட்ட உண்ணும் முறை.

1326. நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. எனவே, இப்னு ஸுபைர் (ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது இப்னு உமர் (ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, ‘இறைத்தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on தடுக்கப்பட்ட உண்ணும் முறை.

வெள்ளரிக்காயுடன் பேரீச்சச் செங்காய்களை உண்ணுதல்.

1325. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை கண்டேன். புஹாரி :5440 அப்துல்லாஹ் பின் ஜாபிர் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on வெள்ளரிக்காயுடன் பேரீச்சச் செங்காய்களை உண்ணுதல்.

சுரைக்காயை விரும்பி உண்ணுதல்.

1324. ‘ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்ந்தி போடப்பட்ட குழம்பையும் நபி (ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்; நபி (ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகி … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , | Comments Off on சுரைக்காயை விரும்பி உண்ணுதல்.

மிக நெருக்கமான நட்புடையவர் விருந்துக்கு அவர் அழைக்காதவர்களை விருந்துக்கு அழைத்துச் செல்தல்.

1322. (போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, ‘நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா?’ என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on மிக நெருக்கமான நட்புடையவர் விருந்துக்கு அவர் அழைக்காதவர்களை விருந்துக்கு அழைத்துச் செல்தல்.

கஅபா – அது என்ன?

ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி இது: இறை இல்லம் ஒன்றை நிர்மாணிக்கும்படி தனது தூதரான இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவருடைய மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கும் இறைவன் கட்டளையிட்டான். இறைக்கட்டளையை சிரமேற்கொண்டு அவ்விருவரும் கட்டியெழுப்பியதுதான் இந்த ‘கஅபா’ ஆலயம்! இந்த இறைஇல்லம் கல்லைக் கொண்டு கட்டப்பட்டதாகும்! இந்த இறைஇல்லம் ஆதம் (அலை) அவர்கள் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on கஅபா – அது என்ன?

விருந்தினருடன் வந்த அழைக்காத நபர் பற்றி..

1321. அபூ ஷுஐப் என்ற அன்ஸாரி, (பிராணியை) அறுத்துத் துண்டு போடும் தம் ஊழியரிடம், ‘ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் தயார் செய்! ஐவரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களையும் நான் அழைக்கப் போகிறேன்; ஏனெனில், அவர்களின் முகத்தில் பசியை நான் உணர்ந்தேன்!” என்று கூறிவிட்டு. ஐவரையும் அழைத்தார். அவர்களுடன் வேறு ஒரு மனிதரும் சேர்ந்து … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on விருந்தினருடன் வந்த அழைக்காத நபர் பற்றி..

உணவு உண்டு முடித்ததும் சாப்பிட்ட விரல்களைச் சூப்புதல்.

1320. உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ளவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5456 இப்னு அப்பாஸ் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , | Comments Off on உணவு உண்டு முடித்ததும் சாப்பிட்ட விரல்களைச் சூப்புதல்.