Monthly Archives: December 2004

நம்பிக்கை கொண்டோருக்கான சட்டதிட்டங்கள்!

24:1. (இது திருக் குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். 24:2. விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்: மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நம்பிக்கை கொண்டோருக்கான சட்டதிட்டங்கள்!

நன்மை புரிபவரின் பிரதிபலன்!

13:19. உம் இறைவனால் உம்மீது நிச்சயமாக இறப்பட்ட(வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தான் நல்லுபதேசம் பெறுவார்கள். 13:20. அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும், (தாம் செய்த) உடன் படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள். 13:21. மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நன்மை புரிபவரின் பிரதிபலன்!

அனைத்தையும் அறிந்தவனின் ஏற்பாடு!

13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது. 13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும்,பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன். 13:10. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அனைத்தையும் அறிந்தவனின் ஏற்பாடு!

அனைத்தையும் அடக்கி ஆள்பவன் அவனல்லவா!

13:16. (நபியே அவர்களிடம்:) “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ் தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும், தீமையும் செய்துக் கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்.” மேலும் கூறும்: குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அனைத்தையும் அடக்கி ஆள்பவன் அவனல்லவா!