Category Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்

சுவனத்தின் சிறப்புகளும் சுவனவாசிகளும்.

1797. மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6487 அபூஹுரைரா (ரலி). 1798. ”எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறினான். … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on சுவனத்தின் சிறப்புகளும் சுவனவாசிகளும்.

ஈடேற்றம் பெற அல்லாஹ்வின் அருள் அவசியம்.

1793. ”இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப் படுவார்)” என்று கூறினார்கள். மக்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)” என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘(ஆம்) என்னையும் தான். அல்லாஹ் அரவணைத்துக் கொண்டால் தவிர” என்று … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on ஈடேற்றம் பெற அல்லாஹ்வின் அருள் அவசியம்.

இறை நம்பிக்கையாளன் நிராகரிப்பவனின் உதாரணம்.

1790. இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்து விடும். காற்று நின்று விட்டால், அது நேராக நிற்கும். சோதனையின் போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on இறை நம்பிக்கையாளன் நிராகரிப்பவனின் உதாரணம்.

நிராகரிப்போர் முகத்தால் நடத்தல்.

1789. ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! இறை மறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?’ என்று (பதிலுக்குக்) கேட்டார்கள். (இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on நிராகரிப்போர் முகத்தால் நடத்தல்.

நரகவாசி வேதனையிலிருந்து விடுபட.

1788. (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘ஆம்”என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், ‘நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நரகவாசி வேதனையிலிருந்து விடுபட.

அல்லாஹ்வை விட பொறுமையாளன் இல்லை.

1787. மன வேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்து விடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு ‘யாருமில்லை’ அல்லது ‘ஏதுமில்லை’ மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவனோ அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6099 அபூ … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on அல்லாஹ்வை விட பொறுமையாளன் இல்லை.

சந்திரன் பிளத்தல்.

1784. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். புஹாரி : 3636 இப்னு மஸ்ஊத் (ரலி). 1785. மக்காவாசிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on சந்திரன் பிளத்தல்.

புகை.

1783. (குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் ஏற்படட்டும்’ எனக் குறைஷியருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டது. எலும்புகளை அவர்கள் சாப்பிடும் அளவிற்கு(ப் பஞ்சம் கடுமையாக இருந்தது.) அவர்களில் … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , | Comments Off on புகை.

நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்கும் போது வேதனை இறங்காது.

1782. (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!” என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்களின் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்கும் போது வேதனை இறங்காது.

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.

1780. அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றைஅவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்’ என்றார். அவர்களின் இன்னொருவர் ‘அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.