Category Archives: இறுதி இறை வேதம்
தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளி வீசும் வேதத்துடனும் வந்த இறைத்தூதர்கள்!
35:15. மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன். 35:16. அவன் நாடினால், உங்களைப் போக்கி விட்டு, (வேறொரு) புதிய படைப்பைக் கொண்டு வருவான். 35:17. இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல. 35:18. (மறுமை – நாளில் தன்) சுமையைச் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; … Continue reading
அல்லாஹ்வின் வேதனையிலிருந்து மனிதனை காப்பாற்றும் வேறு தெய்வங்கள் ஏதேனும் உண்டா?
21:36. இன்னும் (நபியே!) காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் குறை கூறுபவர் இவர்தானா?” என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை, மேலும் அவர்கள் ரஹ்மானுடைய (அருளாளனுடைய) நினைவை நிராகரிக்கின்றனர்.21:37. மனிதன் அவசரக்காரனகவே படைக்கப்பட்டிருக்கிறான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.21:38. … Continue reading
நோன்பின் மாண்பு!
2:183. ஈமான் (நம்பிக்கை) கொண்டோர்களே!உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு (விரதம்) விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) (விரதம்) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் … Continue reading
அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்.
13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது. 13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும்,பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன். 13:10. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை … Continue reading
நன்றி மறந்து நிராகரித்து கடுமையான கூலியை பெற்ற மக்கள்
34:15. நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; ‘உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்’ (என்று அவர்களுக்கு கூறப்பட்டது).
இருளிலிருந்து மனிதர்களை வெளியேற்றி அல்லாஹ்வுடைய பிரகாசத்தின் பால் அழைக்கும் குர்ஆன்!
“ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி என நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?” “நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழியென்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?” “(அவ்வாறிருந்தும்) உங்களில் பெருந்தொகையினரை அவன் நிச்சயமாக வழிகெடுத்து விட்டான். இதனை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா?”. (36:60-62)
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தை விட மேலானவையாகும்.
2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் யாவற்றையும் நன்கறிபவன். 2: 262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், … Continue reading
என்றும் நிலைத்து நிற்கக்கூடியது செல்வமும், பிள்ளைகளுமா இல்லை நற்கருமங்களா?
18:45. இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்துஇறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன: ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
இறுதி தீர்ப்பு நாளை நம்பி தொழுகையை பேணுபவர்களே குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நம்புபவர்கள்!
6:91. இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா (மோஸே) கொண்டு வந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை … Continue reading
இறைவா! உலக வாழ்வில் பார்வையுடையவனாக இருந்த என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?
20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம (தீர்ப்பு) நாளில் குருடனாகவே எழுப்புவோம்” 20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் (உலக வாழ்வில்) பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.