Category Archives: இறுதி இறை வேதம்
நன்மை புரிபவரின் பிரதிபலன்!
13:19. உம் இறைவனால் உம்மீது நிச்சயமாக இறப்பட்ட(வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தான் நல்லுபதேசம் பெறுவார்கள். 13:20. அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும், (தாம் செய்த) உடன் படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள். 13:21. மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது … Continue reading
அனைத்தையும் அறிந்தவனின் ஏற்பாடு!
13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது. 13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும்,பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன். 13:10. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை … Continue reading
அனைத்தையும் அடக்கி ஆள்பவன் அவனல்லவா!
13:16. (நபியே அவர்களிடம்:) “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ் தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும், தீமையும் செய்துக் கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்.” மேலும் கூறும்: குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், … Continue reading
எங்கே திருப்பப்படுகிறார்கள்?
9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் மஸீஹை (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பபபடுகிறார்கள்? 9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், … Continue reading
உறுதியான இறுதி தீர்ப்பு நாள்!
70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப்போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான். 70:2. காஃபிர்களுக்கு (நிராகரிப்பவர்களுக்கு அது ஏற்படும் போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை. 70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்). 70:4. ஒருநாள் மலக்குகளும் (ஜிப்ரயீலாகிய – வான தூதர்) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் … Continue reading
துறவித்தனம் ஆகுமானதா?
57:26. அன்றியும், திடமாக நாமே (அல்லாஹ்வே) நூஹையும், (நோவா) இப்ராஹீமையும் (ஆப்ரகாம்) தூதர்களாக அனுப்பினோம்; இன்னும் அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர். 57:27. பின்னர் அவர்களின் (அடிச்)சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் … Continue reading
அல்லாஹ்வின் திருநாமங்கள்!
60:22. அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். 60:23. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் – அவர்கள் இணை … Continue reading
அநியாயம் புரியாதீர்!
2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில் – நியாயத் தீர்ப்பு நாளில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாய் எழ மாட்டார்கள்) இதற்குக் காரணம் “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, (ஆகுமாக்கி) வட்டியை ஹராமாக்கி (ஆகுமானதல்ல) இருக்கின்றான். ஆயினும் யார் … Continue reading
உலக வாழ்வின் நிலை!
57:20. அறிந்து கொள்ளுங்கள்; “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும், (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; … Continue reading
வேதனை வந்த பின் புலம்பி என்ன பயன்?
39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. 39: 54. ஆகவே (மனிதர்களே) உங்களுக்கு … Continue reading