Posted in இறுதி இறை வேதம் on May 14th, 2010
10:72. (நபி நூஹ் (அலை) தம் சமுதாயத்தை நோக்கி:) “நீங்கள் என்னைப் புறக்கணித்தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் அல்லாஹ்விடமேயன்றி மற்றெவரிடமுமில்லை. நான் முஸ்லிம்களில் இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள். 2:131,132. தன்னைத் தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய இஸ்லாம் மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் இருப்பார். அவருக்கு அவருடைய இறைவன் ‘அஸ்லிம்’ [...]
தொடர்ந்து படிக்க.. »
Posted in இறுதி இறை வேதம் on Nov 13th, 2009
2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும். அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. 3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் [...]
தொடர்ந்து படிக்க.. »
Posted in ஈமான் (நம்பிக்கை) on Nov 11th, 2009
அல்லாஹ்வுடன்… அல்லாஹ்வுடன் நடந்து கொள்ளவேண்டிய ஒழுங்குகள்: ஒரு முஸ்லிம் தன் தாயின் கருவறையில் இந்திரியத் துளியாக இருந்ததிலிருந்து அல்லாஹ் அவனுக்கு அருளிய அருட்கொடைகளை (இவ்வருட்கொடைகள் நாளை மறுமையில் அவன் இறைவனைச் சந்திக்கும்வரை அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்) எண்ணிப் பார்த்து அதற்காக வல்ல நாயனுக்கு, அவனை தனது நாவால் புகழ்ந்து, துதிபாடி, தன் அவயங்களை அவனுடைய வழிபாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் நன்றி செலுத்தவேண்டும். இதுதான் அல்லாஹ்வுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கமாகும். காரணம், அருட்கொடைளை அள்ளித் தந்தவனுடைய சிறப்பை [...]
தொடர்ந்து படிக்க.. »
Posted in இறுதி இறை வேதம் on Sep 11th, 2009
1:2. (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 2:128. “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி [...]
தொடர்ந்து படிக்க.. »
Posted in இறுதி இறை வேதம் on Jul 17th, 2009
அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப் பெயரால்! 1) எல்லாப் புகழும் அனைத்துலகையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய அல்லாஹ்வுக்கே! 2) அவன் மாபெரும் கருணையாளன். தனிப் பெரும் கிருபையாளன். 3) கூலி கொடுக்கும் நாளின் அதிபதி. 4) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5) எங்களை நீ நேரான வழியில் செலுத்துவாயாக! 6) (அது) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி. 7) உனது கோபத்திற்கு ஆளாகாத [...]
தொடர்ந்து படிக்க.. »