நபியின் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவது எப்படி?

நபிகளின் பிரார்த்தனையாலும், சிபாரிசாலும் வஸீலா தேடுவதற்கு இரு முறைகள் இருக்கின்றன. ஒன்று: நபிகளிடம் சென்று அவர்கள் தமக்காக துஆச் செய்ய வேண்டுமென்றும், ஷபாஅத் செய்ய வேண்டுமென்றும் வேண்டிக் கொள்வது. அப்போது அவர்கள் வேண்டியவனுக்காக துஆவும், ஷபாஅத்தும் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்தபோது நடைபெற்ற வஸீலா தேடுதல் என்பது இதுவேயாகும். மறுமை நாளன்றும் இப்படித்தான் அவர்களிடம் வேண்டப்படும். நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் அனைத்து நபிமார்களிடமும் மக்கள் கெஞ்சி நின்றதற்கப்பால் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்பார்கள். இது அனுமதிக்கப்பட்ட ஷபாஅத்தின் மாதிரியாகும். Continue reading நபியின் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவது எப்படி?

பாங்கின் பிரார்த்தனை!

நபிகள் (ஸல்) அவர்கள் தமது உம்மத்துகளிடம் ஸலவாத்துச் சொல்லக் கூறியிருப்பதுபோல தமக்காக வஸீலாவையும், பளீலாவையும், புகழுக்குரிய இடத்தையும் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படியும் ஏவியிருக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஅத்தின் பாங்கு சொல்வதைக் கேட்டால் முஅத்தின் சொல்வதைப் போன்று நீங்களும் சொல்லுங்கள். பிறகு என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். ஒருமுறை என்மீது ஒருவர் ஸலவாத்துச் சொன்னால் அல்லாஹ் அவர்மீது பத்துமுறை ஸலவாத்துச் சொல்வான். பிறகு பாங்குடைய துஆவில் எனக்காக வஸீலாவை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தியுங்கள். இந்த வஸீலா சுவனத்தில் வழங்கப்படும் மாபெரும் ஒரு பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒரே ஒரு மனிதருக்கு அப்பதவி வழங்கப்படுகிறது. அது எனக்கு வழங்கப்படுவதை ஆசைப்படுகிறேன். ஆகவே எனக்காக எவர் அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேட்கிறாரோ அவர் மறுமையில் என்னுடைய ஷபாஅத்துக்கு உரியவராகிறார்’. (முஸ்லிம்) Continue reading பாங்கின் பிரார்த்தனை!

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.

நபிகள் (ஸல்) அவர்கள் எல்லா மக்களுக்கும் பரிந்து பேசி அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும் அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும், அந்தஸ்திலும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாவார்கள். அவர்களின் அந்தஸ்தின் அருகில் எந்த நபிகளும், எந்த ரசூலும் நெருங்க முடியாது. இவர்கள் அல்லாஹ்விடம் எல்லோரையும் விட மதிப்புக்குரியவர். யார் யாருக்கு அவர்கள் இறைவனிடம் துஆச் செய்து மன்றாடி சிபாரிசு செய்கிறார்களோ அவர்கள் தாம் நபிகளாரின் சிபாரிசைக் கொண்டும், துஆவைக்கொண்டும் அல்லாஹ்விடம் நெருங்கி அவனின் திருப்பொருத்தத்தைப் பெறுகிறவர்கள். Continue reading நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.