அல்லாஹ்வுக்கு இணை வைப்பதையும், இணை வைப்பவர்களையும் விட்டும் விலகி கொண்டால், அடியானுக்கு அல்லாஹ் வழங்கும் நன்கொடைகள்!

(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் – நபியாகவும் – இருந்தார். (19:41)

“என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்த தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும். (19:42)

“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன். (19:43) Continue reading அல்லாஹ்வுக்கு இணை வைப்பதையும், இணை வைப்பவர்களையும் விட்டும் விலகி கொண்டால், அடியானுக்கு அல்லாஹ் வழங்கும் நன்கொடைகள்!

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.

நபிகள் (ஸல்) அவர்கள் எல்லா மக்களுக்கும் பரிந்து பேசி அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும் அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும், அந்தஸ்திலும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாவார்கள். அவர்களின் அந்தஸ்தின் அருகில் எந்த நபிகளும், எந்த ரசூலும் நெருங்க முடியாது. இவர்கள் அல்லாஹ்விடம் எல்லோரையும் விட மதிப்புக்குரியவர். யார் யாருக்கு அவர்கள் இறைவனிடம் துஆச் செய்து மன்றாடி சிபாரிசு செய்கிறார்களோ அவர்கள் தாம் நபிகளாரின் சிபாரிசைக் கொண்டும், துஆவைக்கொண்டும் அல்லாஹ்விடம் நெருங்கி அவனின் திருப்பொருத்தத்தைப் பெறுகிறவர்கள். Continue reading நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.