Feed on
Posts
Comments

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7268

தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்து விட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார். அப்போது உமர்(ரலி) அவர்கள், ‘இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை அறிவேன். இது அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வெள்ளிக்கிழமையன்று அருளப்பெற்றது’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7269

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்கள் இறந்த) மறுநாள் முஸ்லிம்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தபோது உமர்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பாக ஏகத்துவ உறுதிமொழியைக் கூறினார்கள். பிறகு ‘இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின் (கூறுகிறேன்:) உங்களிடம் (உலகில்) உள்ள (செல்வத்)தைவிட (மறுமையில்) தன்னிடம் இருப்பதையே தன் தூதருக்கு (வழங்கிட) அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் எந்த வேதத்தைக் கொண்டு உங்கள் தூதரை வழி நடத்தினானோ அதை நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள்; நேர்வழி பெறுவீர்கள். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரை நேர் வழியில் செலுத்தியதெல்லாம் அந்த வேதத்தின் வாயிலாகத்தான்’ என்றார்கள். தொடர்ந்து படிக்க »

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7246

மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாள்கள் தங்கினோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது நாங்கள் எங்களுக்குப் பின்னே விட்டு வந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் வீட்டாரிடம் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; அவர்களிடையே தங்கி அவர்களுக்கு (மார்க்கத்தை)க் கற்பியுங்கள். அவர்களுக்கு (கடமைகளை நிறைவேற்றும்படியும் விலக்கப்பட்டவற்றைத் தவிர்க்கும் படியும்) கட்டளையிடுங்கள்’ என்றார்கள். மேலும், ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால்  உங்களில் ஒருவர் உங்களுக்குத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுக்கட்டும்; உங்களில் பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்றார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் பல விஷயங்களைக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை நான் நினைவில் வைத்துள்ளேன். சிலவற்றை நினைவில் வைக்கவில்லை.

பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7247

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது’ அல்லது ‘அவர் அழைப்பது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும் தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.)

அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான்(ரஹ்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டிக் காட்டினார்கள். தொடர்ந்து படிக்க »

Tue
30
Mar
2010

94. எதிர்பார்ப்பு

பாகம் 7, அத்தியாயம் 94, எண் 7226

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! என்னுடன் (அறப்போரில்) கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுவதைப் பலரும் விரும்ப மாட்டார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடம் வாகன வசதி கிடையாது. இந்நிலை மட்டும் இல்லாதிருப்பின், நான் (எந்தப் போரிலும்) கலந்து கொள்ளாமல் பின்தங்கியிருக்க மாட்டேன். (ஒன்றுவிடாமல் அனைத்திலும் கலந்து கொண்டிருப்பேன்.) நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்ப்டடு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 94, எண் 7227

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டுப், பிறகு கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃரஜ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் இச்சொற்களை மும்முறை கூறினார்கள் என்பதற்கு நான் அல்லாஹ்வை முன் வைத்து சாட்சியம் கூறுகிறேன். தொடர்ந்து படிக்க »

பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7137

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7138

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். தொடர்ந்து படிக்க »

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7048

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் சமுதாயத்தார்’ என்பேன். அதற்கு ‘உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகை விட்டுப் பிரிந்த பின்னால்) இவர்கள் வந்தவழியே அப்படியே திரும்பிச் சென்றார்கள்’ என்று கூறப்படும்.

இதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் ‘அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்களின் மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்’ என்று பிரார்த்திப்பார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7049

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டு வரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். உடனே நான், ‘என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்’ என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், ‘இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது’ என்று கூறுவான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். தொடர்ந்து படிக்க »