Feed on
Posts
Comments

உறவினர்களுடன் நடந்து கொள்வது.

ஒருமுஸ்லிம் தன் பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள் ஆகியோரிடம் எப்படி நடந்து கொள்வானோ அதுபோன்றே தனது இரத்த பந்தமுடையவர்களுடனும் உறவினர்களுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

தன் பெற்றோரிடம் நடந்து கொள்வது போலவே தன் பெற்றோரின் சகோதர, சகோதரிகளுடன் நடந்து கொள்ள வேண்டும். அதாவது தன் தாயின் சகோதரிகளுடனும் தந்தையின் சகோதரிகளுடனும் தாயிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும். தன் தந்தையின் சகோதரர்களுடனும் தாயின் சகோதரர்களுடனும் தந்தையிடம் நடந்து கொள்வது போலவே நடந்து கொள்ள வேண்டும்.

இரத்த பந்தமுடையவர்கள் முஃமின்களாக இருந்தாலும் காஃபிர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் இரத்தபந்தமுடையவர்களாகவே கருத வேண்டும். அவர்களுடன் இணைந்து வாழ்வதும் அவர்களுக்கு நன்மையும் நல்லுபகாரமும் செய்வதும் கடமையாகும்.

அவர்களில் பெரியவர்களைக் கண்ணியப் படுத்தவேண்டும். சிறியவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் நோயுற்றால் அவர்களை நோய் விசாரிக்கச் செல்ல வேண்டும். அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் ஆறுதல் சொல்ல வேண்டும். அவர்கள் உறவை முறித்தாலும் அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவர்கள் கடினமாக நடந்து கொண்டாலும் அவன் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். இவையனைத்தும் திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து படிக்க »

மனைவி மீது கணவனுக்குரிய கடமைகள்

கணவன் விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களையும் மேற்கொள்வது மனைவியின் மீது கடமையாகும்.

1. பாவமல்லாத காரியங்களில் அவனுக்கு அவள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

“அவர்கள் (மனைவியர்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் பிறகு அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். (4:34)

ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்து அவள் செல்லவில்லையென்றால் அவன் அவள் மீது கோபம் கொண்டவனாக அன்றிரவைக் கழித்தால் காலையில் அவள் விழிக்கும்வரை வானவர்கள் அவளை சபிக்கின்றார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்

ஒருவர் மற்றவரின் காலில் விழுவதற்கு நான் அனுமதிப்பதாக இருந்தால் கணவனின் காலில் மனைவி விழுவதற்கு அனுமதித்திருப்பேன் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்:புகாரி, முஸ்லிம்

2. அவள் தனது கண்ணியத்தையும் தன் கணவனது மான மரியாதையையும் பாதுகாப்பதோடு கணவனது பொருள் அவனது பிள்ளைகள் மற்றும் வீட்டிலுள்ள அனைத்து காரியங்களையும் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து படிக்க »

ஒருபால் உறவுக்காரர்களில் முஸ்லிம்கள்

பிரிட்டனில் அண்மைய காலமாக ஒரு சில ஒருபால் உறவுக்காரர்கள் இடையில் நிக்காஹ்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

ஒருபால் உறவு என்பது கிட்டத்தட்ட முஸ்லிம் உலகம் முழுக்கவுமே முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது – அறவே இடமில்லை என்ற ஒரு விவகாரமே இருந்து வருகிறது.

பிரிட்டனை எடுத்துக்கொண்டால், மற்ற சமூகங்களில் உள்ள ஒருபால் உறவுக்காரர்கள், சம உரிமைகளைப் பெறுவதில் கணிசமான தூரம் பயணித்துள்ளார்கள் என்றாலும், பிரிட்டிஷ் முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருபால் உறவுக்காரர்களோ பெரும்பாலும் தங்களது சுய அடையாளத்தைக்கூட வெளிப்படுத்தாமல் இருந்து வருகின்ற ஒரு நிலைதான் காணப்படுகிறது.

சமூகத்தால் ஒதுக்கப்படுவோமோ, இழிவுபடுத்தப்படுவோமோ, தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவோமோ என்ற அச்சம் காரணமாகவே ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் தம்முடைய பாலியல் நாட்டத்தை வெளியில் சொல்லாமல் மூடிவைத்திருக்கின்றனர்.

ஆனால் தாம் உறவுக்காரர்கள் என்று வெளிப்படையாக அறிவிக்கின்ற முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வேறு விதமான அழுத்தங்களை எதிர்கொள்கிறர்கள்.

பிரிட்டனில் நாஸ் என்ற அரசு சார தொண்டு நிறுவனம் தெற்காசிய பூர்வீகம் கொண்ட பிரிட்டிஷ் ஒருபால் உறவுக்காரர்களுக்கு உதவிவருகிறது.

தமது அமைப்பின் உதவியை நாடுவோரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்காகி விட்டது என்று நாஸ் அமைப்பைச் சேர்ந்த ஆஸிஃப் குரெய்ஷி கூறினார்.

ஒருபால் உறவுக்கார முஸ்லிம்கள் நிக்காஹ் – திருமண உடன்படிக்கை செய்துகொண்டு தங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.

ஒரு சில இமாம்களும் இதற்கு உடன்படும் ஒரு நிலை ஆரம்பித்துள்ளது.

பெருமளவில் வெளியில் வராமல் இருந்து விடுகிறார்கள் என்றாலும்கூட, ஒருபால் உறவுக்கார முஸ்லிம்களிடையில் இஸ்லாமிய முறையில் திருமணம் நடக்கிறது என்றால், இஸ்லாத்தையும் ஒருபால் உறவுக்காரர்களின் பாலியல் தெரிவையும் ஒத்துப்போகவைக்க இந்த இமாம்கள் ஏதோ ஒருவகையில் பங்காற்றுகின்றனர் என்பது விளங்குகிறது.

நன்றி: BBC Tamil

மேலுள்ள செய்தி இஸ்லாத்தைப் பூரணமாக அறிந்த முஸ்லிம்களுக்கு நிச்சயம் பாரதூரமான செய்தியாகவே இருக்கும். இறை வேதத்தை அல்லாஹ் நாடிய அளவு கற்றவர்கள் நிச்சயம் இந்த செயல் இறை வரம்பை மீறுதல் என்றே கவலைக் கொள்வர். இந்த ஒருபால் சேர்க்கை செயலை சரிகாணும் இவர்கள் நிச்சயம் பெயரளவிலான முஸ்லிம்களே. சரி இஸ்லாத்தை விளங்கிய இமாம்கள் எவ்வாறு இதற்கு துணைப்போக முடியும்? நிச்சயம் இந்த இமாம்கள் லூத் (அலை) அவர்களின் மனைவியின் பண்பைச் சேர்ந்தவர்களாகவே கருத வேண்டும். தொடர்ந்து படிக்க »

கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்.

மனைவி விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களை மேற்கொள்வது கடமையாகும்.

1. அவளுடன் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தவேண்டும். “அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்: 4:19)

அவன் உண்ணும்போது அவளுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும். அவன் ஆடை அணியும்போது அவளுக்கும் அணியக் கொடுக்க வேண்டும். தனக்கு அவள் மாறு செய்து விடுவாளோ என்று அஞ்சினால் அவளை எவ்வாறு பக்குவப்படுத்த வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவ்வாறு அவளை பக்குவப்படுத்த வேண்டும்.

முதலில் அவளைத் திட்டாமல், ஏசாமல், கேவலப்படுத்தாமல் அவளுக்கு அறிவுரை கூறவேண்டும். அதற்கவள் கட்டுப்படவில்லையென்றால் படுக்கையிலிருந்து அவளை ஒதுக்கி வைக்க வேண்டும். அதற்கும் கட்டுப்படவில்லை என்றால் காயம் ஏற்படாதவாறு அவளை அடிக்க வேண்டும். முகத்தில் அடிக்கக்கூடாது. அடிக்கும்போது இரத்தம் வந்து விடக் கூடாது. அவையங்களுக்குக் கேடு வந்து அவை செயல்பாடுகளை இழந்துவிடக் கூடாது. தொடர்ந்து படிக்க »

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7371

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பி வைத்தார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7372

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7373

முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்’ என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து படிக்க »