May 22nd, 2010 by Jafar Ali
முஸ்லிமுக்குரிய கடமைகள்
ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் ஒழுக்கங்களையும் நம்ப வேண்டும். இதனை அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்கமாகவும் அவனை நெருங்குவதற்குரிய வழியாகவும் கருதி முறையாக நிறைவேற்ற வேண்டும். காரணம் இவற்றைப் பேணி நடக்குமாறு அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான். அவை வருமாறு:
1. அவரைச் சந்தித்தால் பேச்சை தொடங்கும் முன் அவருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு என்று கூறி அவரிடம் முஸாஃபஹா- கைலாகு செய்ய வேண்டும். இதற்கவர் வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு என்று பதில் கூற வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: உங்களுக்கு(ஸலாம்) எனும் வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதை போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள். (4:86)
நபி (ஸல்) கூறினார்கள்: வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும் நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் சிறிய கூட்டம் பெருங்கூட்டத்திற்கும் ஸலாம் சொல்ல வேண்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) புகாரி, முஸ்லிம்
அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீ ஸலாம் சொல் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லஹ் பின் அம்ர்(ரலி), நூல்: புகரி, முஸ்லிம்
2. அவர் தும்மி அல்ஹம்துலில்லஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினால் யர்ஹமுகல்லஹ் (அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக) என்று இவர் கூற வேண்டும். அதற்குப் பதிலாக அவர் யஹ்தீகு முல்லாஹ் வயுஸ்லிஹு பாலகும் (அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டுவானாக! உனது நிலையைச் சீர்படுத்துவானாக!) என்று கூற வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் யாரேனும் தும்மி அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் மற்ற சகோதரர் யார்ஹமுகல்லாஹ் எனக் கூறட்டும். அவர் யார்ஹமுகல்லாஹ் எனக் கூறினால் தும்மியவர் அவருக்காக யஹ்தீகு முல்லஹ் வயுஸ்லிஹு பாலகும் என்று கூறட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி
நபி(ஸல்) அவர்கள் தும்மினால் தமது கையை அல்லது ஆடையை வாயில் வைத்து சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: அபூதாவூத்
3. அவர் நோயுற்றால் அவரை நோய் விசாரிக்கச் சென்று அவர் குணமடைய துஆச் செய்ய வேண்டும்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு ஐந்து விஷயங்களில் கடமைப்பட்டிருக்கிறான். அவை, ஸலாமுக்கு பதில் சொல்வது, நோய் விசாரிப்பது, ஜனாஸாவில் பங்கேற்பது, விருந்தழைப்பை ஏற்பது, அவர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் யர்ஹமுல்லாஹ் எனக் கூறுவது ஆகியவையாகும். (நபிமொழி) புகாரி, முஸ்லிம் தொடர்ந்து படிக்க »
May 21st, 2010 by Jafar Ali
நிய்யத் – எண்ணமும் அதன் தூய்மையும்
வாய்மை மற்றும் தூய எண்ணத்துடன் இருத்தல். வெளிப்படையான, மறைமுகமான அனைத்து செயல்களிலும் சொற்களிலும்!
அல்லாஹ் கூறுகிறான்- ‘மேலும் தங்களது கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கியவர்களாகவும் ஓர்மனப்பட்டவர்களாகவும் அல்லாஹ்வை அவர்கள் வணங்கி வழிபட வேண்டும். தொழுகையையும் நிலைநாட்ட வேண்டும். ஜகாத்தும் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை. இதுவே சீரான – செம்மையான மார்க்கமாகும்’ (98:5) – மற்றோர் இடத்தில்,
‘அந்தப் பலிப்பிராணிகளின் இரத்தமும் இறைச்சியும் அல்லாஹ்வைச் சென்றடையப் போவதில்லை. உங்களின் பயபக்தியே அவனிடம் போய்ச் சேர்கிறது’ (22:37) – இன்னோர் இடத்தில்,
‘உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலும் வெளிப்படுத்தினாலும் சரியே அல்லாஹ் அதனை அறிகிறான்’ (3:29)
தெளிவுரை
நிய்யத்தின் நிறைநிலை
இமாம் நவவி(ரஹ்) அவர்கள் எண்ணத் தூய்மையை வலியுறுத்தி இங்கு மூன்று வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள். நிய்யத் என்றால் என்ன என்பதையும் இந்த வசனங்களின் விளக்கத்தையும் சுருக்கமாகப் பார்ப்போம்!
எண்ணம் எழுவது மனத்தில்தான். மனம் தான் அதற்குரிய இடம். எண்ணத்திற்கும் நாவுக்கும் தொடர்பில்லை. எந்த அமல்களிலும் நிய்யத்தை நாவால் மொழிவதென்பதில்லை. இதனால் தான் தொழுகை, நோன்பு, ஹஜ் அல்லது உளூ போன்ற அமல்களை செய்யும்பொழுது நிய்யத்தை நாவால் மொழிபவன் பித்அத் எனும் புதிய நடைமுறையைக் கடைப்பிடித்தவன் ஆகிறான். அல்லாஹ்வின் மார்க்கத்தில் அதில் இல்லாத ஒன்றைச் சொன்னவனாகிறான்!
நபி(ஸல்) அவர்கள் உளூ, தொழுகை, தர்மம், நோன்பு, ஹஜ் போன்ற இபாதத் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிய பொழுது நிய்யத்தை நாவால் சொன்னதில்லை. நிய்யத்- எண்ணத்திற்கான இடம் மனதே தவிர. நாவல்ல என்பதனால்! தொடர்ந்து படிக்க »
May 16th, 2010 by Jafar Ali
அள்ளக்குறையாத அறிவுச் சுரங்கம்!
தமிழில்: K.J. மஸ்தான் அலீ பாகவி, உமரி, வெளியீடு: இஸ்லாமிக் சென்டர், உனைஸா, சவுதி அரேபியா (யுனிகோட் தமிழில்)
பதிப்புரை:
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலாத்தும் ஸலாமும் நபிகள் நாயகம் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் பொழியட்டுமாக!
இவ்வுலகையும் உலகின் மிகச்சிறந்த படைப்பாக மனிதனையும் படைத்த இறைவன் மனித வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டுமென வகுத்துக் கொடுத்த மகத்தானதொரு வாழ்க்கை நெறிதான் இஸ்லாம்!
மனிதனை அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழச் செய்து மரணத்திற்குப் பின்னர் நாளை மறுமையில் அவனுக்கு, அல்லாஹ்வின் அன்பையும் கிருபையையும் மன்னிப்பையும் பெற்றுத் தந்து அருட்பேறுகள் நிறைந்த சுவனபதிக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் இனிய நெறிதான் – இறைமார்க்கம்தான் இஸ்லாம்!
இத்தகைய ஒப்பற்ற இஸ்லாமிய சன்மார்க்கத்தை இவ்வுலகத்தாருக்கு எடுத்துரைத்து நேர்வழி காட்டுவதற்காக எண்ணற்ற நபிமார்கள் இவ்வுலகில் தோன்றினார்கள். அவர்களுள் இறுதித் தூதராக முஹம்மத் நபி(ஸல்) அவர்களை அனுப்பி வைத்த எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ், அல்குர்ஆன் எனும் மகத்தான வேதத்தையும் அவர்களுக்கு வழங்கினான்.
திருக்குர்ஆனும் திருநபி(ஸல்) அவர்கள் அருளிச்சென்ற ஹதீஸ்களும் இஸ்லாமிய சன்மார்க்கத்தின் இரு மூலாதாரங்களாகும்!
இறைவன் தன்னுடைய இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை முழுமையான அறிவு ஞானத்துடன் பேசச் செய்தான். நாளும் பொழுதும் அப்படி அவர்கள் நவின்ற நல்வாக்குகள்தான் ஹதீஸ்கள் என்கிற பொன்மொழிகள். அவை யாவும் தூய்மையானவை. பாதுகாக்கப்பட்டவை! குர்ஆன் ஓரிடத்தில் கூறுகிறது:
‘அவர் மன இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவது, (அவர் மீது ) இறக்கியருளப்பட்ட வஹியே தவிர வேறில்லை!’ (53 : 3-4) தொடர்ந்து படிக்க »
May 14th, 2010 by Jafar Ali
10:72. (நபி நூஹ் (அலை) தம் சமுதாயத்தை நோக்கி:) “நீங்கள் என்னைப் புறக்கணித்தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம் அல்லாஹ்விடமேயன்றி மற்றெவரிடமுமில்லை. நான் முஸ்லிம்களில் இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.
2:131,132. தன்னைத் தானே மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமுடைய இஸ்லாம் மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் இருப்பார். அவருக்கு அவருடைய இறைவன் ‘அஸ்லிம்’ நீர் (எனக்கு முற்றிலும்) வழிப்படும் எனக்கூறிய சமயத்தில், அவர் (எவ்விதத் தயக்கமுமின்றி) ‘அகிலமனைத்தின் இரட்சகனாகிய உனக்கு இதோ நான் இஸ்லாமாகி விட்டேன் (வழிப்பட்டேன்) என்று கூறினார்” தொடர்ந்து படிக்க »
May 13th, 2010 by Jafar Ali
அண்டை வீட்டாருடன் நடந்து கொள்வது.
அண்டை வீட்டாருக்குரிய உரிமைகளையும் ஒழுக்கங்களையும் ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை முழுமையாகப் பேணி நடப்பது ஒவ்வொரு அண்டை வீட்டாரின் மீதும் கடமையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டைவீட்டார், அந்நியரான அண்டை வீட்டார் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். (4:36)
அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணுமளவிற்கு. அண்டை வீட்டார் பற்றி ஜிப்ரீல்(அலை) என்னிடம் அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வையும் மறுமையயும் நம்பிக்கை கொண்டவர் தன் அண்டை வீட்டாரிடம் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஷுரைஹ்(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம். தொடர்ந்து படிக்க »