Feed on
Posts
Comments

Category Archive for 'ரியாளுஸ் ஸாலிஹீன் (யுனிகோட் தமிழ்)'

27. இன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட..! ஹதீஸ் 27: ஸுஹைப் பின் ஸினான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘ ஓர் இறை நம்பிக்கையாளனின் விவகாரம் குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன். அவனுடைய ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது. இது ஒரு நம்பிக்கையாளனுக்கே அன்றி வேறெவருக்கும் வாய்க்கப் பெறவில்லை! அவனுக்கு மகிழ்வு நிலை வந்தால் நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்கு கஷ்ட நிலை வந்தால் பொறுமை காக்கிறான். அதுவும் அவனுக்கு [...]

தொடர்ந்து படிக்க.. »

26. பொறுமையே சிறந்த செல்வம் ஹதீஸ் 26: அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்ஸாரிகளில் சிலபேர் நபி(ஸல்) அவர்களிடம் பொருளுதவி கேட்டார்கள். நபியவர்களும் வழங்கினார்கள். மீண்டும் கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் வழங்கினார்கள். இறுதியில் நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து விட்டன. இவ்வாறாக தங்கள் கைவசம் இருந்த அனைத்தையும் (இறைவழியில்) நபியவர்கள் செலவு செய்து விட்டபொழுது அந்த அன்ஸாரிகளிடம் சொன்னார்கள்: ஏதேனும் செல்வம் என்னிடம் வந்தால் நான் அதை உங்களுக்குத் தராமல் சேமித்து வைக்க மாட்டேன். ஆனால் [...]

தொடர்ந்து படிக்க.. »

25. பொறுமையின் தனிச்சிறப்பு ஹதீஸ் 25: அபூ மாலிக் அல் அஷ்அரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: தூய்மை (ஈமான் எனும்) நம்பிக்கையின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் தராசை நிரப்புகிறது. ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்லாஹ் வானங்களுக்கும் பூமிக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை நிரப்புகிறது. தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உனக்குச் சாதகமான அல்லது பாதகமான ஆதாரமாகத் திகழ்கிறது!. ஒவ்வொரு மனிதரும் காலையில் (தத்தம் பணிக்காகச்) செல்கின்றனர். தமது ஆன்மா தொடர்பான வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். அதற்கு [...]

தொடர்ந்து படிக்க.. »

பொறுமை அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்” (3:200) மேலும் கூறுகிறான்: ‘சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள், விளைபொருள்களில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்தச் சூழ்நிலைகளில்) பொறுமையை மேற்கொள்வோருக்கு (நபியே!) நீர் நற்செய்தி சொல்வீராக! ‘ (2:155) மேலும் கூறுகிறான்: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி நிறைவாய் வழங்கப்படும்’ (39:10) வேறோர் இடத்தில், [...]

தொடர்ந்து படிக்க.. »

23,24. இருவரும் சுவனம் சென்றனர்! ஹதீஸ் 23: ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ஆதத்தின் மகனுக்கு ஓர் ஓடை நிறைய தங்கம் கிடைத்தால் இரண்டு ஓடைகள் நிறைய தங்கம் வேண்டும் என்று விரும்புகிறான். அவனது வாயை மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பப் போவதில்லை! எவர் பாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான் ” (நூல்: புகாரி, முஸ்லிம்) ஹதீஸ் 24: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ரஸூலுல்லாஹ்(ஸல்) [...]

தொடர்ந்து படிக்க.. »