Tag Archives: சட்டம்

நோன்பின் தத்துவங்கள்!

எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவனே இரவையும் பகலையும் இயக்கக் கூடியவன். மாதங்களையும் வருடங்களையும் சுழன்று வரச் செய்பவன். அவன் அரசன். தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன். மகத்துவத்திலும் நீடித்திருப்பதிலும் தனித்துவம் உடையவன். குறைபாடுகளை விட்டும் மனிதர்களுக்கு ஒப்பாகுதல் என்பதை விட்டும் தூய்மையானவன்! நரம்புகள் மற்றும் எலும்புகளினுள் இருப்பதென்ன என்பதையும் அவன் பார்க்கிறான். மெல்லிய குரல்களையும் நுண்ணிய … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , | Comments Off on நோன்பின் தத்துவங்கள்!

நோன்பை முறித்ததற்காக மீண்டும் நோன்பு நோற்றலும், அதற்கான பரிகாரமும்.

நோன்பை முறிக்கக் கூடிய காரணிகளாக, திருமறைக் குர்ஆனில் மூன்று காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன : உண்ணுதல், பருகுதல் மற்றும் உடலுறவு கொள்ளுதல் ஆகியவைகளாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் : நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , | Comments Off on நோன்பை முறித்ததற்காக மீண்டும் நோன்பு நோற்றலும், அதற்கான பரிகாரமும்.

அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (1)

திருக்குர்ஆன் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பெற்ற மிகப்பெரிய பரிசாகும். அது தரும் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது. சுருக்கமாகச் சொன்னால் திருமறையின் நோக்கம், அதற்கு முன்னால் வந்த இறைவெளிப்பாடுகளைக் காத்து, இறைவனின் வழிகாட்டுதலை மனிதனுக்கு அறிவித்து, மனிதனை நேர்வழியின்பால் இட்டுச் செல்வதேயாகும். அத்துடன் மனிதனின் ஆன்மாவை ஈடேற்றத்தின்பால் கொண்டு செல்கின்றது. மனிதனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, மனிதனின் … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (1)

அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-3

4. ஆண்கள் இயல்பாகவே சில பணிகளை ஆற்றிட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் வியாபாரம், உத்தியோகம் போன்ற பல காரணங்களுக்காக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியதிருக்கின்றது. அவர்கள் வீட்டுக்கு வெளியே தங்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். சில சூழ்நிலைகளில் அவர்கள் அண்டை நாடுகளில் பல மாதங்கள் அல்லது வருடங்கள் தங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றது. இதுபோன்ற எல்லாச் சூழ்நிலைகளிலேயும் அவர்கள் … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-3

அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-1

ஒன்றுக்கு மேற்பட்ட துணைவியர். (PLURALITY OF WIFES) பலதார மணம் என்பதற்கு ஒரு ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுக்குக் கணவனாக இருத்தல் என்று பொருள். இங்கே நாம் பலதார மணம் எனக் குறிப்பிடுவது ஒரு ஆண் பல பெண்களை மணந்திருத்தலைத்தான். ஒரே பெண்ணை பல ஆண்கள் மணந்து கொள்ளும் வழக்கமும் மனித வரலாற்றின் ஒரு … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-1

அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (2)

9. திருக்குர்ஆனே இஸ்லாமிய நாட்டின் அமைப்பு நிர்ணயச்சட்டம். எனினும் முஸ்லிம்கள் தங்களுடைய பொதுவான விவகாரங்களில் ஒருவரை ஒருவர் கலந்தாலோசித்தே செயல்பட்டிட வேண்டும். இது சட்டம் இயற்றும் சபைகளும், ஆலோசனை அவைகளும் ஏற்பட வழிவகுக்கின்றது. இந்த சபைகளும் அவைகளும் வட்டார, தேசிய, சர்வதேசிய அளவில் அமைந்திடலாம். இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரும் பொதுப்பிரச்சினைகளில் தங்களது … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (2)

அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (1)

இஸ்லாத்தில் மனிதனின் பொருளாதார வாழ்வு, உறுதியான அடிப்படை, தெளிவான இறைவழி காட்டுதல் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தனது வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையானவற்றை நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது ஒருவனின் கடமை என்பது மட்டுமல்ல, மாட்சிமைமிக்க சிறந்த நற்குணமுமாகும். உழைத்திடும் திறன் இருந்தும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் அடுத்தவர்களை அண்டிப் பிழைத்திடுவது மார்க்கத்தின் பார்வையில் மிகப்பெரிய பாவமாகும். … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (1)

அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை* (1)

(*இஸ்லாத்தின் குடும்ப அமைப்பு’ என்ற ஆசிரியரின் விரிவான நூலின் சுருக்கமே இங்கே ‘குடும்ப வாழ்க்கை’ என்ற தலைப்பின் கீழ் விவாதிக்கப்படுகின்றது.) ’குடும்பம்’ என்பதற்கு பல்வேறு இலக்கணங்களும் வரையறைகளும் தரப்பட்டுள்ளன. இங்கே நாம் அவைகளில் எளிமையான இலக்கணமொன்றை எடுத்துக்கொண்டு நமது விவாதத்தைத் தொடருவோம். ’குடும்பம்’ என்பது ஒரு மனித சமூகக்கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்த … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை* (1)

அத்தியாயம்-4. A. தனிமனிதனின் தனிவாழ்வு.

இஸ்லாம் மனிதனின் தனிவாழ்க்கைத் தூய்மை நிறைந்த ஒன்றாக இருந்திட வேண்டும் என விழைகின்றது. இந்த விதத்திலேயே தனது போதனைகளை அமைத்துத் தருகின்றது. மனிதன் ஆரோக்கியம் நிறைந்தவனாக இருந்திட, அவனுக்கு மிகவும் ஆரோக்கியமானதொரு உணவு திட்டத்தை அமைத்துத் தந்துள்ளது. தனிமனிதனின் ஒழுக்கம் மாசுபடாமல் இருந்திட, அவன் எவ்வாறு ஆடை அணிந்திட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுகின்றது. அவன் … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-4. A. தனிமனிதனின் தனிவாழ்வு.

அத்தியாயம்-3 கூட்டுத் தொழுகைகள் (ஜமாஅத்)

1. தொழுகைக்காக வந்திருப்பவர்களில் ஒருவரை முன் நிறுத்தி (இமாமாகக் கொண்டு) அவரைப் பின்பற்றித் தொழுவதே கூட்டுத் தொழுகை. இமாம் மார்க்க சட்டதிட்டங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இறையச்சம் மிக்கவராயிருக்க வேண்டும். 2. இமாம் அனைவருக்கும் முன்பாக கிப்லாவை நோக்கி நிற்பார். மற்றவர்கள் அவர்க்குப் பின்னால் அணியணியாக நிற்க வேண்டும். கூட்டுத் தொழுகையை இரண்டுப் பேரைக் … Continue reading

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-3 கூட்டுத் தொழுகைகள் (ஜமாஅத்)