Tag Archives: அபிப்பிராயம்

சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாமா?

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யக் கூடாது. அப்படி சத்தியம் செய்தாலும், அது நிறைவேறாது. இது அறிஞர்களின் ஏகமனதான தீர்ப்பாகும். மலக்குகள், ஷெய்குமார்கள், மன்னர்கள், கஃபா ஷரீஃப் இவர்களைக் கொண்டெல்லாம் ஆணையிட்டால் அந்த ஆணை நிறைவேறாமலாகி விடும். ஷரீஅத்தும் இத்தகைய சத்தியங்களை விலக்குகிறது. இவ்விலக்கல் ‘தஹ்ரீமுடையவும், அல்லது தன்ஸீஹுடையவும்’ அதாவது கடுமையான விலக்கலாக இருக்க இடம்பாடுண்டு.

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on சிருஷ்டிகளைக் கொண்டு சத்தியம் செய்யலாமா?

முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்

ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது: இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று பிரார்த்தித்து விட்டு, யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும் என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்

ஹதீஸ்களின் தராதரங்கள்

இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தமது ஜாமிஉ என்ற ஹதீஸ் தொகுப்பில் ஹதீஸ்களை மூன்றாகத் தரம் பிரித்தார்கள். அவை: ஸஹீஹ், ஹஸன், ளயீஃப் என்பன. இமாம் திர்மிதி அவர்கள்தாம் முதன் முதலாக ஹதீஸ்களை இப்படி பிரித்துக் காட்டியவர்கள். ஒரே ஹதீஸ் பல வழிகளில் அறிவிக்கப்படும் போதும், அறிவிப்பாளர்கள் பட்டியலில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், ஒற்றையாக நிற்பவர்களும் இல்லாமல் … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on ஹதீஸ்களின் தராதரங்கள்

மஸ்ஜிதுன் நபவிக்குப் பயணமாகுதல்

நேர்ச்சைகள் செய்வது கடனைப் போன்றதாகும். கடனை திருப்பி ஒப்படைப்பது கட்டாயமாவதைப் போல நேர்ந்த கடன்களையும் திருப்ப வேண்டுமென அனைத்து இமாம்களும் கூறியிருக்கிறார்கள். எனவே நபியவர்களின் கப்றை நோக்கிப் பிரயாணம் செய்ய வேண்டுமென்று ஒருவர் நேர்ந்தால் அல்லது மற்ற நபிமார்கள், நன்மக்கள் ஆகியோருடைய கப்றுகளில் ஏதேனுமொன்றுக்குப் போக வேண்டுமென்று நேர்ந்தால் அதை நிறைவேற்றுதல் அவசியமில்லை. மாறாக அதை … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on மஸ்ஜிதுன் நபவிக்குப் பயணமாகுதல்

‘நபியைக் கொண்டு வஸீலா தேடுவது’ ஸஹாபாக்களின் கருத்து

நபித்தோழர்களான ஸஹாபிகளின் சொற்களில் காணப்படுகின்ற, மேலும் அவர்களின் பேச்சுகளில் பரிமாறப்பட்ட வஸீலா என்ற வார்த்தையின் தாத்பரியத்திற்கு வருவோம். ஸஹாபிகள் பற்பல சம்பவங்களைக் கூறும்போது நாயகத்தைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கியதாகவும், அவர்களைக் கொண்டு அவனிடம் வஸீலா தேடியதாகவும் (உதவி கோரியதாகவும்) அல்லாஹ்வின்பால் முன்னோக்கியதாகவும் கூறுவார்கள். பற்பல இடங்களில் இப்படிக் காணப்படுகின்றன.

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on ‘நபியைக் கொண்டு வஸீலா தேடுவது’ ஸஹாபாக்களின் கருத்து

தவஸ்ஸுல் வஸீலாவில் ஏற்பட்ட பிசகுதல்கள்

மேற்கூறிய விளக்கங்களெல்லாம் சரிவர நாம் புரிந்து கொண்டோம். அவ்விளக்கங்களிலிருந்து ‘தவஸ்ஸுல் வஸீலா’ என்ற வார்த்தைகளைப் பற்றி ஓரளவுக்கு விளங்க முடிந்தது. இவ்விரு வார்த்தைகளும் அடக்கியிருக்கும் சரியான கருத்துகள் யாவை என்பதுப் பற்றி மேலும் நாம் தெரிய வேண்டியிருக்கிறது. ஏனெனில் பற்பல மாறுபட்ட பிசகுதலான கருத்துகளை மக்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றனர். ‘வஸீலா, தவஸ்ஸுல்’ என்பதின் உண்மையான … Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , | Comments Off on தவஸ்ஸுல் வஸீலாவில் ஏற்பட்ட பிசகுதல்கள்