Tag Archives: வியாபாரம்

தங்கத்துக்கு பகரம் வெள்ளியை விற்றல் பற்றி..

1022. பராஉ இப்னு ஆஸிப் (ரலி), ஸைத் இப்னு அர்கம் (ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார்கள் என அவ்விருவரும் பதில் கூறினார். பிறகு இருவரும் மற்றவரைச் சுட்டிக் காட்டி, ‘இவர் என்னைவிடச் சிறந்தவர்’ என்றனர். புஹாரி :2180 அபூ அல் மின்ஹால் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தங்கத்துக்கு பகரம் வெள்ளியை விற்றல் பற்றி..

கனிகள் பழுக்கும் முன் விற்காதே.

1002. மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடைவது வரை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ‘பக்குவமடைவது என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டதற்கு ‘சிவக்கும்வரை” என்று விடையளித்துவிட்டு, ‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால்…? எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும்?’ எனக் கேட்டார்கள். புஹாரி … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on கனிகள் பழுக்கும் முன் விற்காதே.

பிறருக்கு குத்தகை நிலத்தை தானமாக வழங்குதல்.

998. நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், ‘(விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டாமென்று மக்களைத் தடுத்தார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள்” என்றேன். இதைக்கேட்ட தாவூஸ் (ரஹ்) (என்னிடம்) சொன்னார்கள்: அம்ரே! (என்னுடைய நிலத்தை அவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதால்) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பிறருக்கு குத்தகை நிலத்தை தானமாக வழங்குதல்.

உணவுக்காக குத்தகைக்கு விடுவது கூடாது.

997. ”எங்களுக்கு உதவியாக இருந்த ஒன்றைக் கூடாது என்று இறைத்தூதர் எங்களைத் தடுத்தார்கள்” என்று (என் தந்தையின் சகோதரர்) ளுஹைர் (ரலி) கூறினார். (உடனே), ‘இறைத்தூதர் சொன்னதே சரியானது” என்று கூறினேன். (அதற்கு) அவர் சொன்னார்; ஒரு முறை என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து, ‘நீங்கள் உங்கள் வயல்களை என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on உணவுக்காக குத்தகைக்கு விடுவது கூடாது.

விளைச்சல் நிலத்தை குத்தகைக்கு விடுதல்.

993. எங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், ‘நாங்கள் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்கு விடுவோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘விளைச்சல் நிலம் வைத்திருப்பவர் அதில் தானே பயிரிடட்டும்; அல்லது தன் சகோதரருக்கு (மனீஹாவாகக்) கொடுத்து விடட்டும். அப்படிக் கொடுக்க மறுத்தால் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on விளைச்சல் நிலத்தை குத்தகைக்கு விடுதல்.

முகாபரா முஹாகலா முஸாபனா விற்பனை முறை தடை.

992. நபி (ஸல்) அவர்கள் முகாபராவையும் பலன் உறுதிப்படாத நிலையிலுள்ள, மரத்திலுள்ள கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள் மேலும், பொன் நாணயத்திற்கும் வெள்ளி நாணயத்திற்கும் (பகரமாக) மட்டுமே (அவற்றை) விற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (மரத்திலுள்ள கனிகளுக்குப் பகரமாக சேமிக்கப்பட்ட, உலர்ந்த கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். எனினும்) ‘அராயா’வில் மட்டும் அப்படி விற்பதற்கு அனுமதியளித்தார்கள். … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on முகாபரா முஹாகலா முஸாபனா விற்பனை முறை தடை.

மகரந்த சேர்க்கை.

991. ”மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை யாரேனும் விற்றால் அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கியவர் (தமக்குச் சேர வேண்டுமென்று) நிபந்தனையிட்டிருந்தால் தவிர!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2204 இப்னு உமர் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மகரந்த சேர்க்கை.

குத்துமதிப்பாக கணக்கிட்டு விற்க தடை.

985. ”நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளை குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதை அராயாவில் (மட்டும்) அனுமதித்தார்கள்!” புஹாரி :2188 ஜைது பின் தாபித் (ரலி). 986. ”நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்காக மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். அராயாவில் (மட்டும்) அதற்கு அனுமதி வழங்கினார்கள். அராயாக்காரர்கள் (அராயா அடிப்படையில் மரங்களைப் பெற்றவர்கள்) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on குத்துமதிப்பாக கணக்கிட்டு விற்க தடை.

மரத்தில் தொங்கும் கனிகள் விற்பனை பற்றி…

982. நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும்வரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும். புஹாரி :2194 இப்னு உமர் (ரலி). 983. மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்பதற்கு நபி (ஸல்) தடை செய்தார்கள். மேலும், அவற்றில் எதையும் தீனார், திர்ஹம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on மரத்தில் தொங்கும் கனிகள் விற்பனை பற்றி…

வியாபாரத்தில் ஏமாற்றப்படுதல்.

981. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி (ஸல்) அவர்கள். ‘நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் ‘ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!” என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரிய வந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)” என்றார்கள். புஹாரி :2117 இப்னு உமர் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on வியாபாரத்தில் ஏமாற்றப்படுதல்.