அத்தியாயம்-2 சாந்தி (அமைதி) இஸ்லாத்தின் பார்வையில்

இஸ்லாம், சாந்தி அல்லது அமைதி என்பதை எப்படி அணுகுகின்றது என்பதை அறிந்துகொள்ள ஒருவர் இஸ்லாத்தின் சில அடிப்படைகளை மட்டும் கவனித்தால் போதுமானது. சாந்தி – சமாதானம் (மன அமைதி) இஸ்லாம் இவை அனைத்தும் ஒரே வேரிலிருந்து பிறந்தவைகளே! ஆதலால், இவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று பிணைந்தவைகளே! இறைவனின் அழகிய பெயர்களில் ஒன்று சாந்தி – அமைதி. முஸ்லிம்கள் ஒவ்வொரு இறை வணக்கத்தையும் (தொழுகையை) முடிக்கும்போது இறைவனிடம் அமைதியை வேண்டியே – இறைஞ்சியே முடிக்கின்றனர். முஸ்லிம்கள் இறைவனிடம் திரும்பிடும்போது, அமைதியைக் கொண்டே முகமன் கூறப்படுகின்றார்கள். முஸ்லிம்கள் தினமும் ஒருவரை ஒருவர் அமைதியைக் கொண்டே முகமன் கூறி வரவேற்கின்றனர் – வாழ்த்துகின்றனர் – விட்டுப் பிரிகின்றனர். Continue reading அத்தியாயம்-2 சாந்தி (அமைதி) இஸ்லாத்தின் பார்வையில்

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) அவர்களின் சிறப்பு.

1572. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், ‘நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘ஆம், நபி (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றினார்கள். உங்களை விட்டு விட்டார்கள்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3082 இப்னு அபீ முலைக்கா (ரலி).