Tag Archives: ரமலான்

இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.

இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , | Leave a comment

ரமளான் நோன்பின் சட்டநிலை.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை! அவனை வழிபடுவது, அமல் புரிவோர்க்குச் சிறந்ததொரு சம்பாத்தியமாகும். அவனுக்கு அஞ்சுவது பயபக்தியாளர்களின் உன்னதப் பாரம்பரியம் ஆகும். தன்னுடைய நேசர்களின் உள்ளங்களை-தன் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் தயார்படுத்தியவன் அவனே! அவ்வாறே அவர்களின் விதியிலும் எழுதினான்! இறைவழிபாட்டில் எல்லாக் கஷ்டத்தையும் களைப்பையும் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , | Leave a comment

நோன்பின் தத்துவங்கள்!

எல்லாப் புகழும் இறைவனுக்கே! அவனே இரவையும் பகலையும் இயக்கக் கூடியவன். மாதங்களையும் வருடங்களையும் சுழன்று வரச் செய்பவன். அவன் அரசன். தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன். மகத்துவத்திலும் நீடித்திருப்பதிலும் தனித்துவம் உடையவன். குறைபாடுகளை விட்டும் மனிதர்களுக்கு ஒப்பாகுதல் என்பதை விட்டும் தூய்மையானவன்! நரம்புகள் மற்றும் எலும்புகளினுள் இருப்பதென்ன என்பதையும் அவன் பார்க்கிறான். மெல்லிய குரல்களையும் நுண்ணிய … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , , | Leave a comment

ரமளானைப் புறக்கணித்தல்.

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்லாத்தைப் பின்பற்றுவது மற்றும் தீனின்** அடிப்படைகள் என்பது மூன்று விதமான அடிப்படைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இவைகளில் ஏதாவதொன்றையேனும் யாராவது புறக்கணிப்பார்களென்றால் அவர், இஸ்லாத்தைப் புறக்கணித்தவராவார், அவருடைய இரத்தம் பாதுகாப்பற்றதுமாகும். அந்த அடிப்படைகளாவன: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி பகர்வது, தொழுகையை முறையாகப் பேணிவருவது, ரமளான் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , | Leave a comment

நோன்பை முறித்ததற்காக மீண்டும் நோன்பு நோற்றலும், அதற்கான பரிகாரமும்.

நோன்பை முறிக்கக் கூடிய காரணிகளாக, திருமறைக் குர்ஆனில் மூன்று காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன : உண்ணுதல், பருகுதல் மற்றும் உடலுறவு கொள்ளுதல் ஆகியவைகளாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் : நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Tagged , , , , , , , , , , | Leave a comment