அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-4

 1. முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உலகத்து மக்களுக்காக ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வந்தார்கள். அதுபோலவே வாழ்ந்து காட்டினார்கள். அவர்கள் மேற்கொண்ட திருமண வாழ்க்கையும் மிகவும் அழகிய முறையில் குடும்ப வாழ்வை படம் பிடித்துக் காட்டுவதாகும். அவர்கள் அன்பு நிறைந்த ஒரு கணவராக இருந்தார்கள். மனையறத்தின் கடமைகளை மாண்புற நிறைவேற்றினார்கள். மன்னிக்கும் மாண்பைக்கொண்டு மாதர்களுக்கு மனநிறைவைத் தந்தார்கள். தம் மனைவியோடு ஒப்பற்ற வாழ்க்கைத் துணையாக துணை நின்றார்கள். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் என்னென்ன அனுபவங்களைப் பெறுவானோ அத்தனை அனுபவங்களையும் பெற்றார்கள். அத்தனை அனுபவங்களிலும் ஒரு அழகிய முன்மாதிரியை அமைத்துத் தந்தார்கள். அவர்கள் ஒரு மனைவியோடு வாழ்ந்தார்கள். அதில் ஒரு அழகிய முன்மாதிரியை அவர்களிடம் காணலாம். அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோடு வாழ்ந்தார்கள். அதிலும் அவர்களிடம் சிறந்ததொரு எடுத்துக்காட்டைக் காணலாம். தன்னைவிட வயதில் முதிர்ந்த மனைவியோடு வாழ்ந்திருக்கின்றார்கள். வயதில் குறைந்த மனைவியோடும் வாழ்ந்திருக்கின்றார்கள். விதவையாக்கப்பட்ட பெண்களை மறுமணம் செய்து நறுமணம் பரப்பி இருக்கின்றார்கள். மணவிலக்கு செய்து விடப்பட்ட பெண்களை மணந்து கொண்டு மறுவாழ்வு கொடுத்திருக்கின்றார்கள். கோபம் நிறைந்த துணைவியரோடு வாழ்ந்திருக்கின்றார்கள். குணத்தில் நிறைந்த மனைவியரோடு வாழ்ந்திருக்கின்றார்கள். அத்தனை சூழ்நிலைகளிலேயும் அவர்கள் கருணை மிக்கவர்களாக, பார்வையிலே பரிகாரம் கிடைத்திடும் என்ற அளவில் ஆறுதல் தரும் அமைதி வாழ்க்கையையே நடத்தியுள்ளார்கள். Continue reading அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-4

அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)

3. இஸ்லாமிய வரலாற்றை விமர்சிக்குமுன் அந்த வரலாற்று விற்பன்னர்கள் போரைப்பற்றியும், அமைதியைப் பற்றியும் திருக்குர்ஆன் என்ன சொல்லுகின்றது என்பதை கூர்ந்து, நேர்மையான எண்ணத்தோடு படித்திடுவது நன்மை பல பயக்கும். இஸ்லாம் வெற்றிக்கொண்ட இடங்களிலெல்லாம் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதையும், முஸ்லிம்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பு அவர்கள் இருந்த நிலையையும், இஸ்லாத்தோடு தொடர்பு கொண்ட பின்னர் அவர்கள் எய்திய நிலைகளையும் கூர்ந்து கவனிப்பது அந்த அரசியல் விமர்சகர்களுக்கு இன்னும் பல நன்மைகளைத் தரும். வேற்று நாட்டவர்களால் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் முஸ்லிம்களை அழைத்துத் தங்களை அந்த ஆதிக்கங்களிலிருந்து விடுவித்திட விடுத்த அபயக்குரலைப் படித்திடும்போது அவர்கள் (வரலாற்றாசிரியர்கள்) என்ன நினைப்பார்கள். முஸ்லிம்கள் வெற்றிபெற்ற இடங்களிலெல்லாம் அவர்களை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்ற காட்சிகளை கண்டிடும்போது, அந்நிய ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த அவர்களை மீட்டிட்ட முஸ்லிம்களை பொதுமக்கள் மட்டுமல்ல, மதத்தலைவர்களும் வரவேற்றதை படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? முஸ்லிம்கள் அமுல்படுத்தும் நியதியின் கீழ்தான் தங்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று அழைத்த நிகழ்ச்சிகளைப் படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? இவற்றைப் பார்த்து திகைத்த அவர்கள் திரித்துக்கூற விரும்பினார்களேயன்றி உண்மையை உரைக்க முன்வரவில்லை. Continue reading அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)