அத்தியாயம்-3 நம்பிக்கையின் செயல் முறைகள்

இந்த அத்தியாயத்தில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பார்ப்போம். நாம் ஏற்றுக் கொண்ட நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க இஸ்லாம் சில கடமைகளை விதித்திருக்கின்றது. அவை தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் முதலியவையாகும். இந்தக் கடமைகளை நிறைவேற்றிட வேண்டும் என இறைவன் கட்டளை இட்டிருப்பதற்கான காரணம், மனிதனின் ஆன்மீகத் தேவைகளையும், இன்னும் இதர தேவைகளையும் நிறைவு செய்வதற்காகவேயாகும்.

இந்தக் கடமைகளில் சில தினந்தோறும் நிறைவேற்ற வேண்டியவைகள், சில வாரந்தோறும் நிறைவேற்ற வேண்டியவைகள், சில மாதந்தோறும் நிறைவேற்ற வேண்டியவை, சில ஆண்டிற்கு ஒருமுறை நிறைவேற்ற வேண்டியவைகள், சில வாழ்க்கையில் ஒருமுறையாவது நிறைவேற்ற வேண்டியவைகள்.

ஆகவே அவைகள் வாரத்தின் எல்லா நாட்களையும், மாதத்தின் எல்லா வாரங்களையும், வருடத்தின் எல்லா மாதங்களையும், வாழ்நாளின் எல்லா வருடங்களையும் தழுவி நிற்கின்றன. இவைகளையெல்லாம்விட, அவைகள் மனிதனின் வாழ்க்கையை முழுமையாக இறைவனின் பார்வையில் கொண்டு செல்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மனிதன் இறைவனை நினைத்தவனாக, இறைவனோடு தொடர்புக் கொண்டவனாக இருக்கின்றான், இஸ்லாம் பணித்துள்ள கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமாக! Continue reading அத்தியாயம்-3 நம்பிக்கையின் செயல் முறைகள்

பாடம் – 7

ருகா (மந்திரம் ஓதல்), தாயத்து, துஆக் கூடு முதலியவைகளை அணிதல்.

அல்லாஹ்வின் தூதருடன் (ஸல்) ஒரு பயணத்தில் சென்றபோது வில்கயிறு அல்லது வேறெவற்றையும் கொண்டு ஒட்டகங்களின் கழுத்தில் கட்டப்படும் மாலைகள் யாவும் வெட்டியெறியப்பட வேண்டும் என அறிவிக்குமாறு ஒருவரை நபி (ஸல்) அனுப்பினார்கள். என் அபு பஷிர் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம்:  புஹாரி, முஸ்லிம்.

‘அர்ருகா, அத்திமாயிம், அத்திவாலா, ஆகிய அனைத்தும் ஷிர்க்கான காரியங்களாகும்’ என முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அஹ்மத், அபுதாவுத். Continue reading பாடம் – 7