25.ஹஜ்

பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1529

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்கவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1527

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மதீனா வாசிகள் துல்ஹுலை ஃபாவிலிருந்தும் ஷாம் வாசிகள் மஹ்யஆ எனும் ஜுஹ்ஃபாவிலிருந்தும் நஜ்த் வாசிகள் கர்னிலிருந்தும் இஹ்ராம் அணிவார்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

“யமன் வாசிகள் யலம்லம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிவார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர்கள் கூறுகிறார்கள்: ஆனால், நான் (நேரடியாக) நபி(ஸல்) கூறக் கேட்கவில்லை என இப்னு உமர்(ரலி) கூறினார்.

பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1526

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும்யும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாஸிலையும் யமன் வாசிகளுக்க யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள். Continue reading 25.ஹஜ்

18.கஸ்ருத் தொழுகை

பாகம் 1, அத்தியாயம் 18, எண் 1080

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்வோம். (அதை விட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம்.

பாகம் 1, அத்தியாயம் 18, எண் 1081

யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அறிவித்தார். ‘நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் மதீனா திரும்பும் வரை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்’ என்று அனஸ்(ரலி) கூறியபோது நீங்கள் மக்காவில் எவ்வளவு நாள்கள் தங்கினீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘பத்து நாள்கள் தங்கினோம்’ என்று விடையளித்தார்கள். Continue reading 18.கஸ்ருத் தொழுகை