அத்தியாயம்-4. பெற்றோர்களுக்கும் – குழந்தைகளுக்கும் இடையேயுள்ள உறவு.

குழந்தைகளின் உரிமைகளும் பெற்றோரின் கடமைகளும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் அணுகுமுறையை சில கொள்கைகளாகச் சுருக்கலாம். முதன் முதலாக எந்தப் பிள்ளையும் பெற்றோரின் துன்பத்திற்குக் காரணமாக அமைந்திடலாகாது.  இரண்டாவதாக பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கையும் இழைத்திடக் கூடாது.

சில நேரங்களில், பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்பில் அளவுக்கதிகமாகக் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியமாகவும் இருந்திடுவதுமுண்டு. இந்த உண்மைகளை இஸ்லாம் நன்றாகக் கவனத்தில் கொள்ளுகின்றது. Continue reading அத்தியாயம்-4. பெற்றோர்களுக்கும் – குழந்தைகளுக்கும் இடையேயுள்ள உறவு.

தூய இஸ்லாத்தின் இரண்டாவது அடிப்படை

அல்லாஹ் தன் திருத்தூதர் வாயிலாக நமக்கு விதித்தவற்றைக் கொண்டு நாம் அவனை வணங்க வேண்டும். அப்படியானால் வாஜிப் (கடமை), முஸ்தஹப் (ஸுன்னத்) போன்ற விதிகளுக்குட்பட்ட வழிபாடுகளை நாம் புரிய வேண்டும். இந்த அடிப்படையில் நாம் பார்ப்போமானால் சிருஷ்டிகளையும், மய்யித்துகளையும், மறைந்தவர்களையும் அழைத்து பிரார்த்தித்து அவற்றிடம் உதவி தேடினால் (அதை அல்லாஹ், ரஸூல் யாருமே கடமை என்றோ, ஸுன்னத் என்றோ நமக்கு விதிக்காமலிருக்கும் நிலையில்) இப்படிச் செய்பவன் நிச்சயமாக பித்அத்காரனாக மாறி விடுகிறான். Continue reading தூய இஸ்லாத்தின் இரண்டாவது அடிப்படை

இஸ்லாத்தின் அடிப்படைகள்

தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தூதராவார்கள்) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில் மெய்ப்பித்துச் செயல்படுத்திக் காட்டுதல். அதிலும் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன் யாரையும் இணையாக்காமல் இருத்தல். அப்படியென்றால் அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும் நேசிக்கலாகாது. அல்லாஹ்வை நீ ஆதரவு வைத்து வாழ்வது போல வேறு எந்த சிருஷ்டிகளின் மீதும் ஆதரவு வைக்கலாகாது. அல்லாஹ்வுக்கும் அஞ்சுவது போல பிறருக்கு அஞ்சலாகாது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் இறைவனுடன் படைப்பினங்களைச் சமமாகக் காட்டினால் நிச்சயமாக நீ தவறி விட்டாய். அல்லாஹ்வின் அன்புடனும், அவன் பயத்துடனும், மற்றொரு பயத்தையும், அன்பையும் சேர்த்து இணைத்து விட்டாய். இங்கே இணை வைத்தல் தலை தூக்குகிறது. இந்நேரம் ஆகாயங்களின், பூமியின் இறைவன் ஒருவன் தான் என்று நீ நினைத்தாலும் உன் நம்பிக்கை பழுதாகி விட்டது. Continue reading இஸ்லாத்தின் அடிப்படைகள்

ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.

ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது. Continue reading ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.

ஒரே ஸஹாபியின் கூற்று சான்றாகுமா?

ஒரு ஸஹாபியின் குறிப்பிட்ட தனிமையான ஒரு அபிப்பிராயத்தை மார்க்க விதிகளுக்குச் சான்றாக எடுக்கப்படுமா இல்லையா என்பதில் அறிஞர் சிலர் அபிப்பிராய பேதங்களைக் கூறியுள்ளனர். ஸஹாபாக்களில் ஒருவரின் கருத்து குர்ஆன், ஹதீஸ் நேருரைகளுக்கு (நஸ்ஸுக்கு) மாறாக இல்லையென்றால் அது ஆதாரமாகக் கொள்ளப்படும். ஒருவரின் அபிப்பிராயத்தை அனைத்து ஸஹாபாக்களும் புறக்கணிக்காமல் இருக்கின்ற போதும் அது சான்றுடையதாக மதிக்கப்படும். இதற்கு ‘இஜ்மாவுன் இக்ராரிய்யுன்’என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் தவறுதலான அபிப்பிராயம் கூறப்படுமானால் மற்ற ஸஹாபிகள் அதனை ஏற்கமாட்டார்கள். அதனை புறக்கணித்து விடுவார்களல்லவா? Continue reading ஒரே ஸஹாபியின் கூற்று சான்றாகுமா?