அத்தியாயம்-8. திருமணமும் – மணவிலக்கும். (MARRIAGE AND DIVORCE)

இஸ்லாம் தரும் கொள்கைகளுள் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவை அல்லது மிகவும் திரித்துக் கூறப்பட்டு வருபவை திருமணத்தைப் பற்றி இஸ்லாம் தரும் கொள்கைகளாகும். திருமணங்கள் குறித்து இஸ்லாம் தரும் விளக்கங்களை வெவ்வேறு தரப்பினரும் தங்களது விருப்பம்போல் விமர்சித்து வருகின்றார்கள். அவர்களுக்கு இஸ்லாம் எந்த நோக்கத்தோடு அணுகுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டுவது நிறைந்த பலனைத் தரலாம். ஆகவே இதுகுறித்து நாம் ஏற்கனவே தந்த விளக்கங்களுடன் இன்னும் சில விளக்கங்களை இங்கே தருகின்றோம்.

இஸ்லாத்தில் திருமணங்கள் என்பவை இலாபத்தை நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் ஒப்பந்தங்கள் அல்ல. யார் யார் எவ்வளவு பொருள்களை (’சீர்’ வரிசைகளை) தர வேண்டும், அதற்காக அடுத்தவர்கள் என்னென்ன கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் பட்டியல் போட்டுக்காட்டும் உலகாதாய ஒப்பந்தங்களும் அல்ல. நாம் பின்பற்றி வாழும் மதத்திற்கும் திருமண ஒப்பந்தங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதும் இஸ்லாத்தின் கருத்தல்ல.

திருமணங்கள் புனிதமானவை. அதை உலகியல் இலாபங்களின் அடிப்படையிலிருந்து விமர்சித்திடுவது முறையாகாது. Continue reading அத்தியாயம்-8. திருமணமும் – மணவிலக்கும். (MARRIAGE AND DIVORCE)

அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை* (1)

(*இஸ்லாத்தின் குடும்ப அமைப்பு’ என்ற ஆசிரியரின் விரிவான நூலின் சுருக்கமே இங்கே ‘குடும்ப வாழ்க்கை’ என்ற தலைப்பின் கீழ் விவாதிக்கப்படுகின்றது.)

’குடும்பம்’ என்பதற்கு பல்வேறு இலக்கணங்களும் வரையறைகளும் தரப்பட்டுள்ளன. இங்கே நாம் அவைகளில் எளிமையான இலக்கணமொன்றை எடுத்துக்கொண்டு நமது விவாதத்தைத் தொடருவோம்.

’குடும்பம்’ என்பது ஒரு மனித சமூகக்கூட்டம். அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்த பந்தம் அல்லது திருமண உறவுகள் என்பவைகளால் ஒன்றாக இணைக்கப்படுகின்றார்கள். இந்தக் குடும்பபந்தம் ஒருவர் மற்றவருக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் கொண்டதாகும். இந்த உரிமைகளும் கடமைகளும் மார்க்கத்தினால் ஏற்படுத்தப்பட்டு, சட்டத்தினால் அமுல்படுத்தப்பட்டு, குடும்பத்தில் அங்கம் வகிப்பவர்களால் கடைபிடிக்கப்படுகின்றன. குடும்பத்தைப் பாதுகாத்தல், பராமரித்தல், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுதல், சிறுவர்களிடம் கருணை காட்டுதல், முதியவர்களிடம் மரியாதை காட்டுதல், முதியவர்களைப் பாதுகாத்தல், குடும்பம் சுமூகமாக நடந்திடத் தேவையான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் ஆகியவைகள் இந்தக் கடமைகளில் அடங்கும். Continue reading அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை* (1)

12.அச்சநிலைத் தொழுகை

பாகம் 1, அத்தியாயம் 12, எண் 942

ஷுஜப் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் போர்க்களத் தொழுகையைத் தொழுதுள்ளார்களா? என்று ஸுஹ்ரீ இடம் கேட்டேன். ‘நான் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து நஜ்துப் பகுதியில் போரிட்டிருக்கிறேன். நாங்கள் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து அணிவகுத்தோம். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஒரு பிரிவினர் அவர்களுடன் இணைந்து தொழலானார்கள். மற்றொரு கூட்டத்தினர் எதிரிகளைச் சந்தித்தனர். நபி(ஸல்) அவர்கள் தம்முடன் உள்ளவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு தொழாத கூட்டத்தினரின் இடத்திற்கு நாங்கள் செல்ல, அந்தக் கூட்டத்தினர் வந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தனர். உடனே இவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து தமக்காக ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர்’ என்ற விபரத்தை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூற அதை ஸாலிம் தமக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ விடையளித்தார். Continue reading 12.அச்சநிலைத் தொழுகை

8. தொழுகை

பாகம் 1, அத்தியாயம் 8, எண் 349

நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் ‘திற’ என்றார்கள். அவ்வானவர், ‘யார் அவர்?’ என்று வினவியதற்கு ‘நானே ஜிப்ரீல்’ என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், ‘உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்’ என்று கூறினார்கள். அதற்கு வானவர் ‘அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ‘ஆம்’ என்றார்கள்.

வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.

இந்நிலையிலுள்ள அவர் ‘நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!’ என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். ‘இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்’ என்று கூறினார்கள். Continue reading 8. தொழுகை