ரமளான் நோன்பின் சட்டநிலை.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. அவன் தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை! அவனை வழிபடுவது, அமல் புரிவோர்க்குச் சிறந்ததொரு சம்பாத்தியமாகும். அவனுக்கு அஞ்சுவது பயபக்தியாளர்களின் உன்னதப் பாரம்பரியம் ஆகும்.

தன்னுடைய நேசர்களின் உள்ளங்களை-தன் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் தயார்படுத்தியவன் அவனே! அவ்வாறே அவர்களின் விதியிலும் எழுதினான்! இறைவழிபாட்டில் எல்லாக் கஷ்டத்தையும் களைப்பையும் அவர்களுக்கு இலகுவாக்கினான். ஆகையால் அவர்கள், இறைப்பணி செய்யும் வழியில் எவ்விதச் சோர்வையும் உணரவில்லை!

துர்ப்பாக்கியமுடையவர்கள் மீது – அவர்கள் வழிபிறழ்ந்து சென்ற பொழுது – துர்ப்பாகியத்தை விதித்தான். அவர்கள் அல்லாஹ்வைப் புறக்கணித்தார்கள். அவனை நிராகரித்தார்கள்! ஆகையால் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் அவர்களைப் புகுத்தினான்.

அல்லாஹ்வை – அவன் வழங்கிய அருட்கொடைகளுக்காக நான் புகழ்கிறேன். நான் சாட்சி சொல்கிறேன்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாரும் – எதுவும் நிகரில்லை! எதிரிப் படைகளைத் தோல்வியுறச் செய்தான்! அவனே வென்றான்! மேலும் முஹம்மது நபி, அவனுடைய அடியார்- பிரத்தியேகமாகத் தேர்வு செய்யப்பட்ட திருத்தூதர் என்றும் நான் சாட்சி சொல்கிறேன்!

நபியவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! சிறப்புகளிலும் அந்தஸ்துகளிலும் மிகைத்தவரான நபித்தோழர் அபூபக்ர் மீதும் – எவரைக் குறித்து ஷைத்தான் பயந்து விரண்டோடினானோ அப்படிப்பட்ட உமர் மீதும்- பயபக்தியாளரும் தூய்மையாளரும் குலச்சிறப்புக்கு உரியவருமான உஸ்மான் மீதும் – நபியின் மருகனும் பெரிய தந்தையின் மகனுமாகிய அலீ மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! மேலும் இறைமார்க்கத்தில் உன்னதப் பெருமையையும் லாபத்தையும் சம்பாதித்துக் கொண்டவர்களான நபித்தோழர்கள் அனைவர் மீதும் – வாய்மையுடன் அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும் – தாரகைகள் உதித்து மறைந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் ஸலவாத் பொழிந்து கொண்டிருப்பானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக! Continue reading ரமளான் நோன்பின் சட்டநிலை.

ரமளான் மாதத்தில் நன்மைகளை அதிகம் பெற்றுத் தரத் கூடிய செயல்கள்!

ரமளானில் செய்யப்படும் அமல்களுக்கான கூலிகள் அபரிதமாகக் கணக்கிடப்பட்டு அல்லாஹ்வால் கொடுக்கப்படுகின்றன : அத்தகைய நற்செயல்களாவன :

1. திருமறையை ஓதுதல் :

மகத்துவமிக்கவனான அல்லாஹ் கூறுகின்றான் :

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ – தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ – நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன். (35:29-30)

2. கியாம் என்றழைக்கக் கூடிய இரவுத் தொழுகை :

இது இன்று தராவீஹ் தொழுகை என்றழைக்கப்படுகின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவனொருவன் ரமளான் மாதத்தின் இரவுத் தொழுகையைக் கடைபிடித்துத் தொழுது வருகின்றானோ, அவன் தன்னுடைய வெகுமதியை எதிர்பார்க்கட்டும், அல்லாஹ் அவனது முந்தைய பாவங்களை மன்னித்து விடுகின்றான். (புகாரி, முஸ்லிம், மற்றும் பல.. ..)

3. ஸலாத்துத் தராவீஹ் :

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மக்களே உங்களுக்கிடையில் வாழ்த்துக்களை (ஸலாத்தை)ப் பரிமாறிக் கொள்ளுங்கள், உணவுகளை அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்கிடையே சொந்தங்கள் நட்புகளை இறுக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள், மக்கள் தூங்குகின்ற இரவு நேரங்களில் நீங்கள் எழுந்திருந்து தொழுங்கள், (அவ்வாறு நீங்கள் செய்தால்) பாதுகாப்பாகச் சொர்க்கத்தில் நீங்கள் நுழைந்து விடலாம். (அத்திர்மிதி)

ஸலாத்துத் தராவீஹ் என்ற தொழுகையானது, ரமளான் நாட்களில் இஷாத் தொழுகைக்குப் பின்பு தொழப்படுகின்றது. இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது என்பது மிகச் சிறந்ததொரு செயலாகும். ஓருவேளை அருகில் பள்ளிவாசல் எதுமில்லை என்றால், அதனைத் தனித்துச் தொழுதும் கொள்ளலாம். இது 8 ரக்அத்துக்களைக் கொண்டதாகவும் (4 தடவையாக, ஒவ்வொரு தடவைக்கும் 2 ரக்அத் என்ற அடிப்டையில் தொழ வேண்டும்.), அதனை அடுத்து 3 ரக்அத் கொண்ட வித்ருத் தொழுகையைத் தொழ வேண்டும்.

இரவுத்தொழுகையின் பொழுது வழக்கமாக ரசூல் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்துக்களைத் தொழுது வந்தார்கள் என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்:

முஹம்மது (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்திலும் அது அல்லாத மாதங்களிலும், 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுததில்லை. (புகாரி, முஸ்லிம் மற்றும் பல)

ஆஸிப் பின் யஸீது (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள் :

உபை பின் கஃப் அவர்களையும், தமீம் அத்தாரி (ரலி) அவர்களையும் முன்னின்று தராவீஹ் தொழுகையை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (முவத்தா இமாம் மாலிக்).

ஷேய்க் நஸீரத்தீன் அல்-பானி (ரஹ்) இந்த மேலே உள்ள ஹதீஸ் பற்றி விளக்கமளிக்கும் பொழுது கூறியதாவது: முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு நாளின் இரவில் 11 ரக்அத்துக்களுக்கு மேலாக இரவுத் தொழுகையைத் தொழுகாதிருந்திருக்கும் பொழுது, அந்தப் 11 ரக்அத்துக்களை விடத் தொழ நினைப்பது அனுமதியளிக்கப்பட்டதல்ல. இவ்வாறு அதற்கு அதிகமாகத் தொழ நினைப்பது முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளையை மறுத்து, அவருடைய அந்தச் செயலில் குறைகாண்பதாக ஆகிவிடக் கூடியதாக இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள் என்று கூறியிருக்கும் பொழுது, எவ்வாறு பஜர் தொழுகையினுடைய சுன்னத்தான 2 ரக்அத்துக்களை அதைவிட அதிகமாகத் தொழ முயற்சி செய்ய மாட்டோமோ அதைப் போலவே, இந்தத் தராவீஹ் தொழுகையிலும் 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழ முயற்சி செய்தல் கூடாது. இவ்வாறு அல்லாமல், 11 ரக்அத்துக்களுக்கு மேலாக நாம்தொழுதோமென்றால் இஸ்லாத்தில் ஒரு புதிய நூதனத்தைக் (பித்அத்தைக்) கடைபிடித்தவர்களாவோம், அவ்வாறு 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுது வருபவர்கள் சட்டம் தெரியாதவர்களாக இருப்பின், அவர்களை அழைத்து சட்டத்தைக் கூறுங்கள், அல்லது அவர்களது மன இச்சையைப் பின்பற்றாதிருங்கள். இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது, ஜமாத்துடன் பர்ளுத் தொழுகையை நிறைவேற்றியதற்கு ஒப்பாகும். இந்த இரவு தராவீஹ் தொழுகையை ஆரம்பித்து வைத்து, அதை மூன்று நாட்கள் தொடர்ந்து ஜமாத்தாக முஹம்மது (ஸல்) அவர்கள் தொழுது வந்தார்கள். மேலும், இந்தத் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்தும் தொழாமல் இடையிலேயே விட்டு விட்டதன் காரணமென்னவெனில், இது என்னுடைய சமுதாயத்தினர் மீது பர்ளான தொழுகையைப் போல கடமையாகி விடுமோ எனப் பயந்தே தான் அதைக் கைவிட்டேன் என முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பின்பு வந்த உமர் (ரலி) அவர்கள் இந்த தராவீஹ் தொழுகையை கூட்டுத் தொழுகையாக நடத்தும்படி உபை பின் கஃப் (ரலி) அவர்களையும், தமீம் அத்தாரி (ரலி) அவர்களையும் ஏவினார்கள். மேலே உள்ள ஹதீஸின் அடிப்படையில் 11 ரக்அத்துத் தொழுகையாகவே தொழும்படி அவர்கள் கட்டளையிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (நஸீரத்தீன் அல்பானி, ஸலாத்துத் தராவீஹ் பக்.25).

4. உம்ராச் செய்தல் :

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வது, ஹஜ்ஜுச் செய்ததன் கூலிக்குச் சமமானது. (முஸ்லிம்)

ரமளான் மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன மற்றும் நரகத்தின் வாசல்கள் பூட்டப்படுகின்றன. மற்றும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. மேலும், இந்த மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையாக உள்ள நாட்களில் லைலத்துல் கத்ர் என்ற இரவு ஒன்று வருகின்றது, அ (ந்த இரவான)தில் செய்கின்ற அமல்கள், தொழுகைகள், ஆயிரம் மாதங்கள் அமல்கள் செய்த நன்மையைப் பெற்றுத்தரக் கூடியதாக இருக்கின்றது. அந்த இரவில் யாரொருவர் இறைவனுடைய நற்கூலியை எதிர்பார்த்து இறைவனை வணங்குகின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இந்த இரவு ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் வருகின்றது, அப்பொழுது கீழ்க்கண்ட துஅவை அதிகமதிகம் ஓதிக் கொள்வது சிறப்பானது :

அல்லாஹும்ம இன்னக்க அஃபுஉன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ!

யா அல்லாஹ் நீ மன்னிப்பவனாக இருக்கின்றாய்! மன்னிப்பை விரும்பக் கூடியவனாக இருக்கின்றாய்! எனவே, என்னை மன்னித்தருள்வாயாக! (திர்மிதி மற்றும் இப்னு மாஜா).

Tamil Islamic Library

அத்தியாயம்-9. இஸ்லாத்தில் பெண்களின் நிலை. (STATUS OF WOMEN IN ISLAM)

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பிரச்சினைக்குரிய ஒரு விவாதமே அல்ல. ஆனால் வேதனைக்குரிய நிலையில் அது ஒரு விவாதப்பொருளாக மாற்றப்பட்டு விட்டது. இதற்குக் காரணம், சில மேலைநாட்டவர்கள் வேண்டுமென்றே தூவிய விஷ வித்துக்களேயாகும்.

இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன என்பதற்கு திருக்குர்ஆன் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளது. அத்துடன் ஆரம்பகால முஸ்லிம்கள் பெண்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பது ஒரு வரலாற்றுச் சான்றாகும்.

ஆண்கள் எவ்வாறு சமுதாய வாழ்க்கைக்கு முக்கியமானவர்களோ அவ்வாறே பெண்களும் சமுதாய வாழ்க்கைக்கு முக்கியமானவர்கள். பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்களல்ல. அதுபோலவே பெண்கள் இழிந்த பிறப்பினங்களுமல்ல. முஸ்லிம்கள் இதில் மிகுந்த தெளிவுடன் தான் இருந்தார்கள். மேலைநாட்டு நாகரீகம் என்ற மோகம் தாக்காதிருந்தால் அவர்கள் இன்றும் தெளிவுடன் தான் இருந்திருப்பார்கள். அந்நிய கலாச்சாரங்களும், கவர்ச்சிகளும் ஏற்படுத்திய பாதிப்புகளினால் முஸ்லிம்களில் சிலரும், மேலைநாட்டவர்களும் இதை தெளிவு பெறவேண்டிய ஒரு பிரச்சினை என்றாக்கி விட்டார்கள். Continue reading அத்தியாயம்-9. இஸ்லாத்தில் பெண்களின் நிலை. (STATUS OF WOMEN IN ISLAM)

அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகள்.

ஈத் என்றால் விழா அல்லது மீண்டும் மீண்டும் வரும் மகிழ்ச்சி என்று பொருள். முஸ்லிம்கள் அனைவருக்கும் பெருநாள் தொழுகை மிக முக்கியமானதாகும். இது அன்றாடத் தொழுகையின் சிறப்புக்களையும், ஜும்ஆத் தொழுகையின் பலன்களையும் கொண்டது. இது முஸ்லிம்களின் பிணைப்புகளை வலுப்படுத்தும் தன்மையைக் கொண்டது.

பெருநாள்கள் இரண்டு முதலாவது ‘ஈதுல் பித்ர்’ என்று சொல்லப்படும் நோன்புப் பெருநாளாகும். அது ரமளான் மாதத்தை அடுத்துவரும் (முஸ்லிம் ஆண்டின் 10-வது மாதம்) ஷவ்வால் மாதம் முதல் நாளில் வரும். ரமளான் மாதத்தில் தான் குர்ஆன் அருளப்பட்டது. அதே மாதத்தில் தான் நோன்பும் நோற்கப்படுகின்றது. இரண்டாவது பெருநாள் ’ஈதுல் அள்ஹா’ (தியாகப் பெருநாள்) முஸ்லிம் ஆண்டின் இறுதி மாதமான ‘துல்ஹஜ்’ பத்தாம் நாளில் இது வருகிறது. இது ஹஜ் கடமையின் (மக்கா யாத்திரை) நிறைவை ஒட்டி கொண்டாடப்படுவதாகும். Continue reading அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகள்.

அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.

இஸ்லாம் தரும் ஒழுக்கக் கொள்கைகள் சில அடிப்படை நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் சில:

1). இறைவன் படைத்தவன், அவனே நன்மைகளின் பிறப்பிடம். அவனே உண்மையின் இருப்பிடம். அழகும் அழகிய கலையும் அவனே!

2). மனிதன், இறைவனின் பொறுப்பு மிகுந்த பிரதிநிதி ஆவான். Continue reading அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.