அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.

உண்மையான முஸ்லிமின் சமுதாய வாழ்க்கை மிகவும் உயர்ந்த கொள்கைகளின் கீழ் அமைந்ததாகும். வாழ்க்கை இன்பம் நிறைந்ததாகவும், வளம் நிறைந்ததாகவும் இருந்திடும் விதத்தில் ஒரு முஸ்லிமின் தனிவாழ்வும், பொதுவாழ்வும் அமைக்கப்பட்டுள்ளன. வர்க்கப் போராட்டம், இனவேறுபாடுகள், தனிமனிதனின் சமுதாயத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்லது சமுதாயம் தனிமனிதனை ஆதிக்கம் செலுத்துவது இவைகளெல்லாம் இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்வுக்கு அந்நியமானவை. Continue reading அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.

மறுமை நாளையின் பரிந்துரைகள் (ஷபாஅத்துகள்)

இறுதி நாளில் பரிந்துரை செய்வது பற்றி ஸஹீஹான சில ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அன்று மக்கள் அனைவரும் ஆதம் நபி அவர்களிடமும், (உலுல் அஸ்ம்) திடகாத்திர, உறுதிபாடுள்ள நபிமார்களான நூஹ், இப்றாஹீம், மூஸா, ஈஸா (அலை) ஆகியோரிடமும் வந்து தமக்காக ஷபாஅத் செய்ய வேண்டுமென்று கெஞ்சுவார்கள். அந்த நபிமார்களில் ஒவ்வொருவரும் மற்றவரிடம் மக்களைத் திருப்பி அனுப்பி வைப்பார்கள். இறுதியில் நபி ஈஸா (அலை) அவர்களிடம் மக்கள் திரண்டெழுவார்கள். அப்போது ஈஸா (அலை) அவர்கள் ‘நபி முஹம்மதை நோக்கிச் செல்லுங்கள். அவர்கள் முன்பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவர்கள்’ என்று கூறுவார்கள். Continue reading மறுமை நாளையின் பரிந்துரைகள் (ஷபாஅத்துகள்)