அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகள்.

ஈத் என்றால் விழா அல்லது மீண்டும் மீண்டும் வரும் மகிழ்ச்சி என்று பொருள். முஸ்லிம்கள் அனைவருக்கும் பெருநாள் தொழுகை மிக முக்கியமானதாகும். இது அன்றாடத் தொழுகையின் சிறப்புக்களையும், ஜும்ஆத் தொழுகையின் பலன்களையும் கொண்டது. இது முஸ்லிம்களின் பிணைப்புகளை வலுப்படுத்தும் தன்மையைக் கொண்டது.

பெருநாள்கள் இரண்டு முதலாவது ‘ஈதுல் பித்ர்’ என்று சொல்லப்படும் நோன்புப் பெருநாளாகும். அது ரமளான் மாதத்தை அடுத்துவரும் (முஸ்லிம் ஆண்டின் 10-வது மாதம்) ஷவ்வால் மாதம் முதல் நாளில் வரும். ரமளான் மாதத்தில் தான் குர்ஆன் அருளப்பட்டது. அதே மாதத்தில் தான் நோன்பும் நோற்கப்படுகின்றது. இரண்டாவது பெருநாள் ’ஈதுல் அள்ஹா’ (தியாகப் பெருநாள்) முஸ்லிம் ஆண்டின் இறுதி மாதமான ‘துல்ஹஜ்’ பத்தாம் நாளில் இது வருகிறது. இது ஹஜ் கடமையின் (மக்கா யாத்திரை) நிறைவை ஒட்டி கொண்டாடப்படுவதாகும். Continue reading அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகள்.

அத்தியாயம்-3 தொழுகையை நிறைவேற்றுதல்.

ஒளு, பாங்கு, இகாமத் ஆகியவை முடிந்தவுடன் தொழுகை பின்வருமாறு தொடங்குகின்றது.

1. பஜ்ருத் தொழுகை

இந்தத் தொழுகையில் சுன்னத் தொழுகையாக இரண்டு ரக்அத்களும் பின்னர் பர்ளுத் தொழுகையாக (கட்டாயத் தொழுகையாக) இரண்டு ரக்அத்களும் தொழ வேண்டும்.

தொழும் முறைகள் இரண்டிற்குமே ஒன்றுதான். நிய்யத் வைப்பதில் மட்டுமே வேறுபாடு உள்ளது.

தொழுகையின் முறைகள் பின்வருமாறு: Continue reading அத்தியாயம்-3 தொழுகையை நிறைவேற்றுதல்.

அத்தியாயம்-3 உடல் தூய்மை செய்தல். (ஒளு)

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பு ஒருவர் தூய்மையான நிலையில் இருத்தல் வேண்டும். அழுக்கு தூசு படக்கூடிய அளவில் வெளியில் தெரியக்கூடிய பகுதிகளை கழுவி சுத்தப்படுத்துவது அவசியமாகும். இதனைத்தான் ஒளுச்செய்தல் என நாம் சொல்லுகிறோம். அதன் செயல்முறை பின்வருமாறு: Continue reading அத்தியாயம்-3 உடல் தூய்மை செய்தல். (ஒளு)

73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்

பாகம் 6, அத்தியாயம் 73, எண் 5545

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார். (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது’ என்று கூறினார்கள்.

உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்து விட்டிருந்த) அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) என்னிடம் ஒரு வயதுடைய (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது’ என்று கூறினார்கள்.

‘(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என மற்றோர் அறிவிப்பில் உள்ளது. இதையும் பராஉ(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.

பாகம் 6, அத்தியாயம் 73, எண் 5546

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கிறவர் தம(து சொந்த செலவு)ககாகவே அறுத்தவராவார். தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவராவார்’ என்று கூறினார்கள். Continue reading 73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்

அறுத்துப் பலியிடும் நேரம்.

ஈதுல் அல்ஹாவில் (ஹஜ்ஜூப் பெருநாள் தினம்) அறுக்கப்படும் பிராணிகள்.

1280. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். ‘தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்றை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்” என்றார்கள்.

புஹாரி : 985 ஜூன்துப் (ரலி).

1281. அபூ புர்தா என்றழைக்கப்பட்டு வந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், ‘உம்முடைய ஆடு இறைச்சி ஆடுதான். (குர்பானி ஆடன்று)” என்று கூறினார்கள். அபூ புர்தா (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)” என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்றவருக்குப் பொருந்தாது” என்று சொல்லிவிட்டு, ‘தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுப்பவர் தமக்காகவே (அதை) அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்து விட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்” என்று கூறினார்கள்.

புஹாரி : 5556 அல் பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1282. ”(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவர் திரும்பவும் அறுக்கட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது ஒருவர் எழுந்து ‘மாமிசம் விரும்பி உண்ணக் கூடிய நாளாகும் இது. சதைப் பற்றுள்ள இரண்டு ஆடுகளை விட எனக்கு விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்றும் என்னிடம் உள்ளது’ என்று கூறித் தம் அண்டை வீட்டார்(களுக்கும் கொடுக்க வேண்டியுள்ளது) பற்றியும் குறிப்பிட்டார். (தொழுகைக்கு முன்பே அறுப்பதற்கு மேற்கண்ட காரணங்களால் அவர் அனுமதி கேட்டார்) அவருக்கு நபி (ஸல்) சலுகை வழங்கினார்கள். இந்தச் சலுகை மற்றவர்களுக்கும் உண்டா இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை.

புஹாரி : 954 அனஸ் (ரலி).

1283. நபி (ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, ‘அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!” எனக் கூறினார்கள்.

புஹாரி : 2300 உக்பா பின் ஆமிர் (ரலி).