அத்தியாயம்-3 இறந்தோருக்கான தொழுகை (ஜனாஸா தொழுகை)

1. இறந்துபோன ஒரு முஸ்லிமுக்காக இறைவனைத் தொழுவது முஸ்லிம்களுடைய கூட்டுக் கடமையாகும். இந்தத் தொழுகையை இறப்பின்போது குழுமியிருக்கும் முஸ்லிம்கள் நிறைவேற்றினால் போதுமானது. குழுமியிருப்பவர்களில் சிலர் இந்தத் தொழுகையை நிறைவேற்றினாலும் போதுமானது.

2. இறந்தவரின் உடலை சோப்பு அல்லது அழுக்கு நீக்கும் பொருள்களால் சில தடவைகள் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். உடலை முற்றிலும் சுத்தப்படுத்திய பிறகு வெண்மையான பருத்தி துணிகளால் மூட வேண்டும். Continue reading அத்தியாயம்-3 இறந்தோருக்கான தொழுகை (ஜனாஸா தொழுகை)

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உதவி தேடினார்களா?

அறிஞர் தபரானி தமது ‘முஃஜமுல் கபீர்’ என்ற நூலில் ‘ஒரு நயவஞ்சகன் மூமின்களுக்கு கெடுதிகள் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) மூமின்களை நோக்கி, வாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் செல்வோம். இந்த நயவஞ்சகனின் தொல்லையிலிருந்து தப்பிக்க நபிகளைக் கொண்டு உதவித் தேடுவோம்’ என்றார்களாம். இதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘என்னைக் கொண்டு எப்படி உதவித் தேட முடியும். அல்லாஹ்வைக் கொண்டுதான் உதவி தேடப்பட வேண்டும்’ என்று அபூபக்கர் (ரலி) அவர்களுக்குக் கூறியதாக குறிப்பிடுகிறார்கள். Continue reading அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உதவி தேடினார்களா?