அத்தியாயம்-4. குடும்ப வாழ்வின் ஏனைய பகுதிகள்

நம்மிடம் வேலை செய்பவர்கள், நமது குடும்பத்தோடு இணைந்த ஏனைய உறுப்பினர்கள், உறவினர்கள், நம்மை அடுத்து வாழும் அண்டை வீட்டார்கள், இவர்களோடு நாம் அமைத்துக் கொள்ள வேண்டிய உறவின் முறையும் குடும்ப வாழ்க்கையோடு தொடர்புடையதே. நிரந்தரமாக தங்களது வேலைகளுக்காக ஏவலர்களை அமர்த்தியிருப்பவர்கள், அந்த ஏவலர்களை தங்களுடைய சகோதரர்களைப்போல் நடத்திட வேண்டும் என்றும், அடிமைகளைப்போல் நடத்திடக் கூடாதென்றும் இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். ஏனெனில் யாரெல்லாம் தங்களுடைய ஏவலர்களை நல்ல முறையில் நடத்துகின்றார்களோ அவர்களது மரணத்தை இறைவன் மகிழ்ச்சியானதாகவும், எளிதானதாகவும் ஆக்கியருள்வான் என பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். Continue reading அத்தியாயம்-4. குடும்ப வாழ்வின் ஏனைய பகுதிகள்

இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.

இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்) (அல்குர்ஆன்:2:183)

இனி முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு சம்பந்தமான தெளிவை இதன் மூலம் அறிந்து கொள்ள முயற்சிப்போம்.

குறிப்பாக மேலே குறிப்பிட்டுள்ள அல்குர்ஆன் வசனம் முஸ்லிம்களுக்கு நோன்பு ஏதும் புதிய கடமையல்ல என்பதனையும், கடந்த காலங்களில் இறைவனால் அறிமுகப்படுத்தப்பட்ட இறை சட்டங்களைப் பின்பற்றிய சமூகத்தவர்களுக்குக் கூட கடமையாக்கப்பட்டிருந்தது என்ற உண்மையை அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்திற்கும் இன்னொரு மார்க்கத்திற்கும் வேற்றுமை இருந்து வந்திருக்கின்றது. இன்றும்கூட பெரும்பாலான மார்க்கங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தைக் கெடுத்து இருந்தாலும் சரி! மேலும் இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் மனித உள்ளங்கள் ஓய்வு பெறுவதுடன், அதனை ஏற்றுக் கொண்டு அதற்குக் கட்டுப்படுவதும் இலேசாக இருக்கும். மேலும் ஏனையவர்களுக்கும் நோன்பு அனுஷ்டிப்பது கடமையாக்கப்பட்டிருந்தது என்ற மனத் திருப்தியினால் கஷ்டமானதாகத் தோன்றவும் மாட்டாது.

ஒரு முஸ்லிம் நோன்பு நோற்பதன் நோக்கம் என்ன? என்ற கேள்விக்கு அதனை கடமையாக்கிய இறைவனே தெளிவான பதில் அளிக்கின்றான். அதாவது (நீங்கள் இறைபக்தி உள்ளவர்களாக ஆவதற்கே) என்பதுவே அதுவாகும். எனவே ஒரு முஸ்லிம் நோன்பு நோற்பதன் மூலம் இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதையே கருத்திற் கொண்டிருப்பான்.

வெறுக்கப்பட்ட, இழிவான பண்புகளுக்கிடையில் நோன்பு பாதுகாவலாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் வழங்கப்படும் பாதுகாவலாகும். மேலும் இதனால் சமூகத்தில் சிறந்த பண்புகளுடன் கூடிய மனிதர்கள் உருவாகவும் வாய்ப்பேற்படுகின்றது. இதுபற்றி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது (நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் யாராவது நோன்பு நோற்றிருக்கும் நிலையில் தீய வார்த்தைகள் பேசவோ, உடலுறவில் ஈடுபடவோ, தீய செயல்களில் ஈடுபடவோ வேண்டாம். யாராவது உன்னுடன் சண்டையிட்டால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி, நான் நோன்பாளி எனக் கூறுவீராக!) என்றார்கள். மேலும் நோன்பு ஒரு கேடயமாகும். அதாவது பாதுகாப்பாகும். அதன் பொருளாவது நோன்பாளி நான் நோன்பு நோற்பது தனது மிருகத்தனமான தீங்குகளை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே என நம்புவதாகும். தான் நோன்பாளி எனக் கூறுவதன் மூலம் தான் மானிடப் பண்புகளுடன் இருப்பதையும், மிருகத்தனமான பண்புகளில் இல்லை என்பதையும் ஞாபகப்படுத்துகின்றான். தன்னை தன் உள்ளத்தின் தீங்குகளை விட்டும் பாதுகாத்து, தனது தீங்குகளை விட்டும் தனது சமூகத்தைப் பாதுகாக்கும் போது இறைவனின் திருப்தியைப் பெற்றுக் கொண்டு இறை பக்தியாளர்களில் நின்றும் ஆகிவிடுவார். Continue reading இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்.

கெட்ட பெயர்களை நல்ல பெயராக மாற்றுதல்.

1384. ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது ‘அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. எனவே, அவருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸைனப்’ என்று பெயர் சூட்டினார்கள்.

புஹாரி 6192 அபூஹூரைரா (ரலி).

இஸ்லாத்தின் அடிப்படைகள்

தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தூதராவார்கள்) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில் மெய்ப்பித்துச் செயல்படுத்திக் காட்டுதல். அதிலும் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன் யாரையும் இணையாக்காமல் இருத்தல். அப்படியென்றால் அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும் நேசிக்கலாகாது. அல்லாஹ்வை நீ ஆதரவு வைத்து வாழ்வது போல வேறு எந்த சிருஷ்டிகளின் மீதும் ஆதரவு வைக்கலாகாது. அல்லாஹ்வுக்கும் அஞ்சுவது போல பிறருக்கு அஞ்சலாகாது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் இறைவனுடன் படைப்பினங்களைச் சமமாகக் காட்டினால் நிச்சயமாக நீ தவறி விட்டாய். அல்லாஹ்வின் அன்புடனும், அவன் பயத்துடனும், மற்றொரு பயத்தையும், அன்பையும் சேர்த்து இணைத்து விட்டாய். இங்கே இணை வைத்தல் தலை தூக்குகிறது. இந்நேரம் ஆகாயங்களின், பூமியின் இறைவன் ஒருவன் தான் என்று நீ நினைத்தாலும் உன் நம்பிக்கை பழுதாகி விட்டது. Continue reading இஸ்லாத்தின் அடிப்படைகள்

சன்மார்க்கம்!

மனிதர்கள் எவற்றைச் செய்ய வேண்டுமென்று நபியவர்கள் பணித்திருக்கிறார்களோ அவற்றைப் புரிவதால் சன்மார்க்கத்தை அடைய முடிகிறது நபியவர்கள் செய்ய வேண்டாமென்று எவற்றைத் தடுத்தார்களோ அவற்றைத் தவிர்ந்து நடக்க வேண்டும். அவர்கள் கூறிய சொற்களுக்கொப்ப செயல்பட்டு அச்சொற்களை நம்வாழ்வில் மெய்பித்துக் காட்ட வேண்டும். அப்படியானால் நிச்சயமாக நாம் சன்மார்க்கத்தை அடையலாம். அல்லாஹ்வின்பால் சென்றடைய இதைக் காட்டிலும் நேர்மையான ஒருவழியே இல்லை. இறைவனை நெருங்கிய நல்மக்கள் இப்பாதையைப் பின்பற்றினர். இதனால் அவர்கள் வெற்றியடைந்து ஜெயசீலர்களாகவும் திகழ்ந்தனர். இப்பாதையை கடைபிடித்தொழுகிய அல்லாஹ்வின் படைகள் அவன் பாதையில் போராடி பெரும் வெற்றிகளை ஈட்டினார்கள். இதற்கு நேர்முரணாக எவர்கள் நடப்பார்களோ அவர்களெல்லாம் வழி தவறி நெறி கெட்ட பாதையில் சென்று விடுகிறார்கள். இதனால் இம்மை, மறுமை ஆகிய ஈருலகில் வேதனைக்கும் சோதனைக்கும் ஆளாகி விடுகின்றனர். Continue reading சன்மார்க்கம்!