நபியின் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவது எப்படி?

நபிகளின் பிரார்த்தனையாலும், சிபாரிசாலும் வஸீலா தேடுவதற்கு இரு முறைகள் இருக்கின்றன. ஒன்று: நபிகளிடம் சென்று அவர்கள் தமக்காக துஆச் செய்ய வேண்டுமென்றும், ஷபாஅத் செய்ய வேண்டுமென்றும் வேண்டிக் கொள்வது. அப்போது அவர்கள் வேண்டியவனுக்காக துஆவும், ஷபாஅத்தும் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்தபோது நடைபெற்ற வஸீலா தேடுதல் என்பது இதுவேயாகும். மறுமை நாளன்றும் இப்படித்தான் அவர்களிடம் வேண்டப்படும். நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் அனைத்து நபிமார்களிடமும் மக்கள் கெஞ்சி நின்றதற்கப்பால் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஷபாஅத்தைக் கேட்பார்கள். இது அனுமதிக்கப்பட்ட ஷபாஅத்தின் மாதிரியாகும். Continue reading நபியின் துஆவைக் கொண்டு வஸீலா தேடுவது எப்படி?

நபிமார்களின் தன்மைகளுக்கும், அல்லாஹ்வின் தன்மைகளுக்குமிடையில் உள்ள வித்தியாசம்

நபிமார்கள் இறைதூதர்களாவார்கள். அல்லாஹ்வின் ஏவல்கள், விலக்கல்கள், வாக்குறுதிகள், எச்சரிக்கைகள், மற்றும் செய்திகள் அனைத்தையும் நம்மீது எத்தி வைக்கும் இடையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்ற அனைத்தையும் உண்மையென ஏற்று, அவற்றிற்கொப்ப வழிபட்டு செயல்படுதல் நம்மீது கடமையாகும். எந்த விதமான வேற்றுமையும் காட்டாமல் இவ்விதமாக நபிமார்கள் அனைவரைக் கொண்டும் விசுவாசம் கொள்ள வேண்டும். எந்த ஒரு நபியையும் ஒருவன் ஏசினாலும் அப்படி ஏசுபவன் காஃபிராகி விடுவதுடன் முர்தத்தான (மதம் மாறிய)வனுடைய சட்டம் இவன் மீது அமுல் படுத்தப்பட்டு மரண தண்டனைக்கு ஆளாவான். Continue reading நபிமார்களின் தன்மைகளுக்கும், அல்லாஹ்வின் தன்மைகளுக்குமிடையில் உள்ள வித்தியாசம்

ரஸூல்மார்களின் பணிகள் யாவை?

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்குச் சேர்த்து வைக்கின்ற ஓர் இடையாளராக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் ஹிதாயத் எனும் நேர்வழியை அடியார்களின் உள்ளத்தில் சேர்த்து வைக்கும் பொறுப்புரிமை அல்லாஹ்வுடையது. அது நபியவர்களுக்கு உரியது அல்ல. அதற்கு சக்தி உடையவன் அல்லாஹ் ஒருவனே. திருத்தூதர்களால் இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாது. Continue reading ரஸூல்மார்களின் பணிகள் யாவை?

இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?

வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல் என்னும் சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள் வழங்குகின்றனர். அம்மூன்றில் இரு பொருள்களை எவராலும் மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும் ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள். அதில் ஒன்று: அசலில் தவஸ்ஸுல் என்பதற்குப் பொதுவாக ஈமான், இஸ்லாம், நற்கருமம் என்ற அர்த்ததைக் கொடுப்பது. அதாவது நபிகளைக்கொண்டு ஈமான் கொண்டு, அவர்களுக்கு வழிப்பட்டு, அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பது. இப்படி நடந்து அவனை நெருங்குவது. Continue reading இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?