அத்தியாயம்-3 நம்பிக்கையின் செயல் முறைகள்

இந்த அத்தியாயத்தில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பார்ப்போம். நாம் ஏற்றுக் கொண்ட நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க இஸ்லாம் சில கடமைகளை விதித்திருக்கின்றது. அவை தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் முதலியவையாகும். இந்தக் கடமைகளை நிறைவேற்றிட வேண்டும் என இறைவன் கட்டளை இட்டிருப்பதற்கான காரணம், மனிதனின் ஆன்மீகத் தேவைகளையும், இன்னும் இதர தேவைகளையும் நிறைவு செய்வதற்காகவேயாகும்.

இந்தக் கடமைகளில் சில தினந்தோறும் நிறைவேற்ற வேண்டியவைகள், சில வாரந்தோறும் நிறைவேற்ற வேண்டியவைகள், சில மாதந்தோறும் நிறைவேற்ற வேண்டியவை, சில ஆண்டிற்கு ஒருமுறை நிறைவேற்ற வேண்டியவைகள், சில வாழ்க்கையில் ஒருமுறையாவது நிறைவேற்ற வேண்டியவைகள்.

ஆகவே அவைகள் வாரத்தின் எல்லா நாட்களையும், மாதத்தின் எல்லா வாரங்களையும், வருடத்தின் எல்லா மாதங்களையும், வாழ்நாளின் எல்லா வருடங்களையும் தழுவி நிற்கின்றன. இவைகளையெல்லாம்விட, அவைகள் மனிதனின் வாழ்க்கையை முழுமையாக இறைவனின் பார்வையில் கொண்டு செல்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மனிதன் இறைவனை நினைத்தவனாக, இறைவனோடு தொடர்புக் கொண்டவனாக இருக்கின்றான், இஸ்லாம் பணித்துள்ள கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமாக! Continue reading அத்தியாயம்-3 நம்பிக்கையின் செயல் முறைகள்

இஸ்லாத்தின் அடிப்படைகள்

தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தூதராவார்கள்) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில் மெய்ப்பித்துச் செயல்படுத்திக் காட்டுதல். அதிலும் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன் யாரையும் இணையாக்காமல் இருத்தல். அப்படியென்றால் அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும் நேசிக்கலாகாது. அல்லாஹ்வை நீ ஆதரவு வைத்து வாழ்வது போல வேறு எந்த சிருஷ்டிகளின் மீதும் ஆதரவு வைக்கலாகாது. அல்லாஹ்வுக்கும் அஞ்சுவது போல பிறருக்கு அஞ்சலாகாது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் இறைவனுடன் படைப்பினங்களைச் சமமாகக் காட்டினால் நிச்சயமாக நீ தவறி விட்டாய். அல்லாஹ்வின் அன்புடனும், அவன் பயத்துடனும், மற்றொரு பயத்தையும், அன்பையும் சேர்த்து இணைத்து விட்டாய். இங்கே இணை வைத்தல் தலை தூக்குகிறது. இந்நேரம் ஆகாயங்களின், பூமியின் இறைவன் ஒருவன் தான் என்று நீ நினைத்தாலும் உன் நம்பிக்கை பழுதாகி விட்டது. Continue reading இஸ்லாத்தின் அடிப்படைகள்

அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை

வழிபாடுகளில் ஏற்றமானது தொழுகை. அத்தொழுகையில் குர்ஆன் ஓதுதல், துஆக்கள் கேட்டல், திக்ரு செய்தல் யாவும் அடங்கியிருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் அதற்குரிய குறிப்பிட்ட இடத்தில் சொல்ல வேண்டுமென்பது சட்டம். தக்பீர் கட்டித் தொழுகையில் நுழைந்து ‘வஜ்ஜஹ்த்து, தனா போன்றவை ஒதி முடித்ததும் குர்ஆனிலிருந்து சிறிதளவு ஓதவேண்டும். ருகூவிலும், ஸுஜுதிலும் குர்ஆன் ஓதுதல் விலக்கப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும் திக்ருகள், துஆக்கள் தான் ஓதவேண்டும். பெருமானார் அவர்கள் தொழுகையின் இறுதியில் பிரார்த்தித்திருக்கிறார்கள். தோழர்களிடமும் அதைப் போன்று பிரார்த்திக்க ஏவியிருக்கிறார்கள். குறிப்பாக ஸுஜுதில் துஆ செய்வது மிக ஏற்றமானது. ஸுஜுதில் அதிகமாகப் பிரார்த்திப்பதைப் பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பியிருக்கிறார்கள். நிலையிலும், ருகூவிலும் கூடப் பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படும். குர்ஆன் ஓதுவதும், திக்ரு செய்வதும் தொழுகையில் மிகச்சிறந்த கர்மங்களாக இருந்தும் கூட மனிதன் தன் இரட்சகனிடம் சிரம் பணிந்து பாவமன்னிப்புத் தேடுதல் சிலாகிக்கத் தக்கதாக கருதப்படுகிறது. Continue reading அனுஷ்டானங்களில் சிறந்தது தொழுகை

பாடம் – 11

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கான செயலாகும்.

“இன்னும் நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர் ஜின்களில் உள்ள ஆண்கள் பலரிடம் (தங்களை) காக்கத் தேடிக் கொண்டிருந்தனர் இதனால் அவர்கள் (ஜின்கள்) அவர்களை (மனிதர்களை) பாபத்திலும் இறையச்சமற்ற தன்மையில் கர்வத்தையும் அதிகமாக்கி விட்டார்கள்.” என அல்லாஹ் கூறுகிறான். (72:6)

“ஒரு தங்குமிடத்தில் நுழையும் போது ‘அல்லாஹ்வின் வார்த்தைகளில் (படைப்பினங்களின்) தீங்குகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்,’ என யாரேனுமொருவர் கூறினால் அவர் அந்த இடத்தை விட்டு நீங்கும் வரை அவரை எந்தத் தீங்கும் அணுகாது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அறிவித்ததாக ஹவ்லா பின்த் ஹாகிம் தெரிவிக்கிறார். ஆதாரம்: முஸ்லிம்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கை சார்ந்த ஒரு செயலாகும்.

இப்படிப்பட்ட காரியங்களின் உதவிகள் மூலம் உலகலாவிய ஒரு சில விஷயங்களில், சில சந்தர்ப்பங்களில், லாபமும், வெற்றியும் பெறவோ அல்லது சில தீங்குகளை அல்லது நஷ்டங்களை விட்டும் பாதுகாப்புப் பெறவோ சிலருக்கு முடிந்த ஒரே காரணத்தால் இக்காரியங்களில் ஈடுபடுவது ஷிர்க்கை விட்டும் நீங்கியவை என்று ஒருவரும் கருதக் கூடாது.

மேற்குறிப்பிட்ட ஹதீஸின் ஆதாரத்தின் மூலம் அல்லாஹ்வின் வார்த்தைகள் அவனுடைய படப்பினங்களல்ல என இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் நிர்ணயிக்கிறார்கள். இதன் அடிப்படையில் படைப்பினங்களின் பாதுகாப்பை நாடும் காரியம் ஷிர்க்காகும்.

மேற்குறிப்பிட்ட துஆ மிகச்சிறியதாயினும் பெரும் மகத்துவம் மிக்கது.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.