அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)

3. இஸ்லாமிய வரலாற்றை விமர்சிக்குமுன் அந்த வரலாற்று விற்பன்னர்கள் போரைப்பற்றியும், அமைதியைப் பற்றியும் திருக்குர்ஆன் என்ன சொல்லுகின்றது என்பதை கூர்ந்து, நேர்மையான எண்ணத்தோடு படித்திடுவது நன்மை பல பயக்கும். இஸ்லாம் வெற்றிக்கொண்ட இடங்களிலெல்லாம் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதையும், முஸ்லிம்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பு அவர்கள் இருந்த நிலையையும், இஸ்லாத்தோடு தொடர்பு கொண்ட பின்னர் அவர்கள் எய்திய நிலைகளையும் கூர்ந்து கவனிப்பது அந்த அரசியல் விமர்சகர்களுக்கு இன்னும் பல நன்மைகளைத் தரும். வேற்று நாட்டவர்களால் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் முஸ்லிம்களை அழைத்துத் தங்களை அந்த ஆதிக்கங்களிலிருந்து விடுவித்திட விடுத்த அபயக்குரலைப் படித்திடும்போது அவர்கள் (வரலாற்றாசிரியர்கள்) என்ன நினைப்பார்கள். முஸ்லிம்கள் வெற்றிபெற்ற இடங்களிலெல்லாம் அவர்களை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்ற காட்சிகளை கண்டிடும்போது, அந்நிய ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த அவர்களை மீட்டிட்ட முஸ்லிம்களை பொதுமக்கள் மட்டுமல்ல, மதத்தலைவர்களும் வரவேற்றதை படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? முஸ்லிம்கள் அமுல்படுத்தும் நியதியின் கீழ்தான் தங்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று அழைத்த நிகழ்ச்சிகளைப் படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? இவற்றைப் பார்த்து திகைத்த அவர்கள் திரித்துக்கூற விரும்பினார்களேயன்றி உண்மையை உரைக்க முன்வரவில்லை. Continue reading அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)

அத்தியாயம்-2 இஸ்லாம் தரும் சமத்துவம்.

சமத்துவம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுள் ஒன்றாகும். இஸ்லாம் தரும் சமத்துவத்தைக் குறிப்பிட சமத்துவம் என்ற வார்த்தையைவிட ‘நியாயம், நேர்மை’ என்ற வார்த்தைகளே பொருத்தமானதாக அமையும். It is Not Equality But Equit. இங்கே சமத்துவம் என்பதை ஒரே மாதிரியானது அல்லது ஒன்றைப்போல் மற்றொன்று என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. இஸ்லாம், இறைவனின் முன் அனைவரும் ‘சமம்’ எனக் கூறுகின்றது. இதற்கு மனிதர்கள் தங்களுக்குள் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று பொருளல்ல. மனிதர்கள், தங்கள் திறமைகளால், தகுதிகளால், அவர்கள் கொண்டிருக்கும் ஆசைகளால், செல்வங்களால் வேறுபட்டு நிற்பவர்களே. ஆனால் இவைகளில் எதுவும் ஒரு மனிதனின் அந்தஸ்தை இன்னொரு மனிதனின் அந்தஸ்திலிருந்து உயர்த்தி விடாது. அதுபோலவே இவைகளில் எதுவும் ஒரு இனத்தை இன்னொரு இனத்தை விட உயர்ந்ததாக ஆக்கிவிடாது.

மனிதனின் கோத்திரம் அல்லது குலம், மனிதனின் நிறம், மனிதன் பெற்றிருக்கும் செல்வங்கள், அவன் சமுதாயத்தில் வகிக்கும் அந்தஸ்து இவைகளில் எதுவும் இறைவன் முன் ஒரு மனிதனைவிட இன்னொரு மனிதனை உயர்ந்தவனாக ஆக்கிடாது. இறைவன் இவைகளை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களுக்கிடையே பாகுபாடுகளை ஏற்படுத்துவதில்லை. இறைவன் மனிதர்களை அளக்கின்ற அளவுகோல் அவர்கள் கொண்டுள்ள இறையச்சமேயாகும். இறையச்சத்தின் அடிப்படையிலிருந்து இறைவன் மனிதர்களுக்கிடையில் எந்த பாகுபாட்டையும் ஏற்படுத்துவதில்லை. இறைவன் மனிதர்களை அவர்கள் செய்கின்ற நற்செயல்களையும், தீய செயல்களையும் அடிப்படையாகக் கொண்டே பிரித்தறிகின்றான். இதனை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது: Continue reading அத்தியாயம்-2 இஸ்லாம் தரும் சமத்துவம்.

அத்தியாயம்-2 இறைத்தூது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிடுவான் வேண்டி எண்ணற்ற நபிமார்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி – இறைத்தூதர் அனுப்பப்பட்டுள்ளார். இறைவனின் தூதர்கள் அத்தனை பேரும் சீரிய ஒழுக்கங்களின் சிகரங்களாய் திகழ்ந்தனர். அவர்களை இறைவன், தனது வழிகாட்டுதலை மனிதர்களுக்கு வழங்குவதற்காக பயிற்றுவித்தான். அவர்களது நேர்மை, நாணயம், அறிவின் ஆழம் இவைகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தன. அவர்கள் இறைவனின் வழிகாட்டுதல்களை மீறி நடந்ததே இல்லை. இந்த வகையில் அவர்கள் பாவங்களே செய்தவர்களல்ல எனக் கொள்ளலாம். ஆனால் அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் தங்களை அறியாமல் சில தவறுகளைச் செய்திருக்கலாம். சில முடிவுகளில் அவர்கள் தவறி இருக்கலாம். ஆனால் அவர்கள் இறைவன் வகுத்துத் தந்த வரையறைகளை மீறியதே கிடையாது.

இறைவன், இறைதூதர்களை அனுப்பி இருப்பது பூமிக்கும், சுவர்க்கத்திற்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதேபோல் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகின்றது. இறைவன் இறைத்தூதர்களை அனுப்பி இருப்பது மனிதனை மாற்ற முடியும், அவனை பண்புடையவனாக ஆக்கிட முடியும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இன்னும், மனிதனிடம் தீமைகளை செய்யும் பண்புகளைவிட, நன்மையைச் செய்யும் பண்புகளே அதிகமாக இருக்கின்றன என்று பொருள்.

மனிதன் இயற்கையாகவே அறிந்திருப்பவற்றை உறுதிபடுத்திடுவது, அவனால் இன்னும் என்னென்னவற்றை புதிதாகத் தெரிந்திட முடியுமோ அவற்றை அறிவிப்பது, அவனுக்கு தெரியாதவற்றை தெரியத்தருவது இவைகளே இறைத்தூதின் நோக்கமாகும். மனிதனுக்காக இறைவன் தரும் நேரிய பாதையை அவனுக்கு தெரிவிப்பது இறைத்தூதின் இலட்சியமாகும். மனிதனை நன்மை செய்யத் தூண்டுவதும், தீமையைச் செய்வதிலிருந்து தடுப்பதும் இறைத்தூதின் இனியப் பணியாகும். Continue reading அத்தியாயம்-2 இறைத்தூது.

அத்தியாயம்-2 இறையச்சம்.

நன்மையான செயல்  – நல்லன செய்தல், (ஈமான்) நம்பிக்கை, இவைகளின் கீழ் விவாதித்தவை இறையச்சத்திற்கும் பொருந்தும். இறையச்சம் எனப்படுவது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல. அல்லது நமது வசதிக்குத் தக்கப்படி வைத்துக்கொண்டதும் அல்ல. இறையச்சம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இங்கேயும் திருக்குர்ஆனே நமது முதல் ஆதாரமாக பயன்படும். திருக்குர்ஆன் இறையச்சம் மிக்கோரைப்பற்றி குறிப்பிடும்போது: “(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள். இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (திருக்குர்ஆன்: 2:3-5)

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். தவிர, மானக்கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர். இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது. (திருக்குர்ஆன்: 3:134-136) Continue reading அத்தியாயம்-2 இறையச்சம்.

[பாகம்-19] முஸ்லிமின் வழிமுறை.

காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை

இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர்.

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19)

‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக இருப்பான். (அல்குர்ஆன்: 3:85)

இதனால் இஸ்லாத்தை  ஏற்றுக்கொள்ளாத அனைவருமே காஃபிர்கள் என்று ஒரு முஸ்லிம் கருத வேண்டும். காஃபிருடன் பின்வரும் ஒழுக்கங்களைப் பேணி நடக்க வேண்டும். Continue reading [பாகம்-19] முஸ்லிமின் வழிமுறை.