அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)

3. இஸ்லாமிய வரலாற்றை விமர்சிக்குமுன் அந்த வரலாற்று விற்பன்னர்கள் போரைப்பற்றியும், அமைதியைப் பற்றியும் திருக்குர்ஆன் என்ன சொல்லுகின்றது என்பதை கூர்ந்து, நேர்மையான எண்ணத்தோடு படித்திடுவது நன்மை பல பயக்கும். இஸ்லாம் வெற்றிக்கொண்ட இடங்களிலெல்லாம் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதையும், முஸ்லிம்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பு அவர்கள் இருந்த நிலையையும், இஸ்லாத்தோடு தொடர்பு கொண்ட பின்னர் அவர்கள் எய்திய நிலைகளையும் கூர்ந்து கவனிப்பது அந்த அரசியல் விமர்சகர்களுக்கு இன்னும் பல நன்மைகளைத் தரும். வேற்று நாட்டவர்களால் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் முஸ்லிம்களை அழைத்துத் தங்களை அந்த ஆதிக்கங்களிலிருந்து விடுவித்திட விடுத்த அபயக்குரலைப் படித்திடும்போது அவர்கள் (வரலாற்றாசிரியர்கள்) என்ன நினைப்பார்கள். முஸ்லிம்கள் வெற்றிபெற்ற இடங்களிலெல்லாம் அவர்களை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்ற காட்சிகளை கண்டிடும்போது, அந்நிய ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த அவர்களை மீட்டிட்ட முஸ்லிம்களை பொதுமக்கள் மட்டுமல்ல, மதத்தலைவர்களும் வரவேற்றதை படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? முஸ்லிம்கள் அமுல்படுத்தும் நியதியின் கீழ்தான் தங்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று அழைத்த நிகழ்ச்சிகளைப் படித்திடும்போது அவர்கள் என்ன நினைப்பார்கள்? இவற்றைப் பார்த்து திகைத்த அவர்கள் திரித்துக்கூற விரும்பினார்களேயன்றி உண்மையை உரைக்க முன்வரவில்லை. Continue reading அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)

அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)

நோன்பு, இஸ்லாத்திற்கே உரிய ஒழுக்க, ஆன்மீக தனித்தன்மைகளுள் ஒன்றாகும். வைகறை வரும் முன் ஆரம்பித்து, சூரியன் அடையும்வரை உணவு, பானம், உடலுறவு இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விலகி இருத்தலே நோன்பாகும். இது ரமளான் மாதம் முழுவதும் நோற்கப்படுவதாகும்.

இஸ்லாம், கடமையாக்கியுள்ள நோன்பிற்கு பல பரந்த பொருள்களுண்டு. அதனுடைய நோக்கமும் மிகவும் விரிவானதாகும். Continue reading அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)

சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுதல்

ஒருவன் மற்றவனிடம் ‘சிருஷ்டிகளின் மீது சத்தியமாக என்று கூறி ஆணையிட்டால் இந்த சத்தியம் நிறைவேறாது. சிருஷ்டிகள் என்ற விஷயத்தில் நபிமார்கள், மலக்குகள் அனைத்து படைப்பினங்களும் ஒரே நிலைதான். அல்லாஹ்வுக்கு சில ஹக்குகள் (உரிமைகள்) இருக்கின்றன. அவற்றில் தம் படைப்புகளில் எவரும் பங்காளிகள் அல்ல. நபிமார்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மூமின்களுக்கும் சில ஹக்குகள் உண்டு. மக்களில் சிலருக்கு மற்றவர்கள் மீது சில உரிமைகள், கடமைகள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்குரிய ஹக்கு என்னவென்றால் சிருஷ்டிகளால் அவன் வணங்கப்பட்டு, அவர்களால் அவன் இணைவைக்கப்படாமல் இருப்பதாகும். இதை விளக்கிக் காட்டுகின்ற முஆத் (ரலி) அவர்களின் ஹதீஸை முன்னர் நாம் கூறியுள்ளோம். Continue reading சிருஷ்டிகளைக் கொண்டு ஆணையிடுதல்