அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-3

4. ஆண்கள் இயல்பாகவே சில பணிகளை ஆற்றிட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் வியாபாரம், உத்தியோகம் போன்ற பல காரணங்களுக்காக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியதிருக்கின்றது. அவர்கள் வீட்டுக்கு வெளியே தங்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள். சில சூழ்நிலைகளில் அவர்கள் அண்டை நாடுகளில் பல மாதங்கள் அல்லது வருடங்கள் தங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றது. இதுபோன்ற எல்லாச் சூழ்நிலைகளிலேயும் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வார்கள் என எதிர்பார்த்திட முடியாது. பல மாதங்களாக அல்லது பல வருடங்களாக வீட்டுக்கு வெளியே தங்குபவர்கள் சில நேரங்களில் புதிய பெண்களிடம் தவறி விழுந்திடுவதுண்டு. சில மனிதர்கள் இயல்பாகவே இதில் பலவீனமானவர்களாக இருக்கலாம். அவர்களால் சாதாரண உந்தல்களைக்கூட கட்டுப்படுத்திட முடியாமல் போகலாம். அவர்கள் உணர்வுகளின் உந்தல்களால் பாவத்தில் விழுந்து விடலாம். இங்கேயும் ஏற்கனவே விவரித்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பலதாரமணம் அனுமதிக்கப்படலாம்.

இதுபோன்று வேற்று நாடுகளில் வருடக்கணக்காகத் தங்கிடும் ஆண்கள் சட்டப்படி இன்னொரு மனைவியையும் மணந்து கொள்ளலாம். அதன் மூலம் அவர்கள் பாவங்கள் இழைப்பதிலிருந்தும், தனது உணர்வுகளால் அழைக்களிக்கப்படுவதிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அந்த (முதல்) மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் இது நன்மைப் பயப்பதாகும். தனது கணவன் கண்டவர்களையெல்லாம் கொள்கிறான் என்பதைவிட சட்டப்படியான இன்னொரு மனைவியோடு நீதி நெறிமுறைகளுக்கு உட்பட்டே ஒழுகி வாழ்கிறான் என்பது அவர்களது எரிச்சலையும், ஏக்கத்தையும் தணிப்பதாகவே அமையும். Continue reading அத்தியாயம்-7. பலதார மணம். (POLYGAMY) பகுதி-3

அத்தியாயம்-4 நித்திய வாழ்க்கையில் இஸ்லாத்தை செயல்படுத்தும் முறை.

இஸ்லாம் ஒரு வெற்றுத் தத்துவமல்ல. தேவைபடும்போது புகழாரங்களைச் சூட்டி அழகு பார்த்துவிட்டுப் புறக்கணித்திடக்கூடிய ஓட்டைச் சித்தாந்தமுமில்லை. ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை இந்த கண்ணோட்டத்தில் அணுகிடுவதுமில்லை.

நமது வாழ்க்கையில் நாளும் நடைமுறைப்படுத்தி நன்மையடைந்திட வேண்டிய நிறைவான வாழ்க்கை வழிகாட்டியே இஸ்லாம். Continue reading அத்தியாயம்-4 நித்திய வாழ்க்கையில் இஸ்லாத்தை செயல்படுத்தும் முறை.

கஃபா மனிதனைத் தாவஃப் செய்கிறதா?

புனித மக்கமாநகரில் இருக்கின்ற ஆதி இறையில்லமான கஃபத்துல்லாஹ் அப்படியே எழுந்து வந்து தன்னை (தவாஃப்) சுற்றுவது போல சில காட்சிகள், மாபெரும் அர்ஷும், அதன் மீது பெரியதொரு உருவமும் இருப்பது போலக் காணும் இன்னொரு காட்சி, யார் யாரோ வானத்தில் பறந்து செல்கிறார்கள், சிலர் அணிவகுத்து வானத்திலிருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர், இத்தகைய இன்னுமொரு காட்சி இத்தகைய காட்சிகளைச் சிலர் காணுகின்றனர். Continue reading கஃபா மனிதனைத் தாவஃப் செய்கிறதா?

இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்

அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதரும் எவரைப் பற்றி இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்குகள் என்று விளக்கினார்களோ அவர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று: நூஹ் நபியின் சமூகத்திலுள்ளவர்களைப் போன்றோர். மற்றொன்று: நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோரைப் போன்றவர்கள். இவ்விரு கூட்டத்தினரும் இறைவனுக்கு ஒவ்வொரு மாதிரியாக இணை வைத்தார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார் (ஸாலிஹீன்களான) இறைவனின் நல்லடியார்கள் இறந்தால் அவர்களுக்குச் சமாதிகளைக் கட்டி உயர்த்தி அந்த சமாதிகளின் மீது தரித்திருந்து நாட்களைக் கழித்து பிறகு சமாதிகளில் புதைக்கப்பட்டவர்களின் உருவச் சிலையைக் கட்டி உயர்த்தி அந்தப் பிம்பங்களுக்கு கீழ்ப்படிந்து வழிபாடுகளைச் செலுத்தினார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகமோ இணைவைப்பதில் மற்றொரு வழியைக் கையாண்டார்கள். நட்சத்திரங்களை வணங்கினார்கள். சூரியன் சந்திரன் மற்றும் கிரகங்களுக்கெல்லாம் வணக்கங்களைச் செலுத்தினார்கள். அவற்றைக் கடவுளாகவும் மதித்தார்கள். Continue reading இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்

பாடம் – 5

ஷிர்க் (அல்லாஹ்வுடன் ஏனையவைகளை இணை வைத்தல்)

ஷிர்க் எனும் செயல் இரண்டு வகைப்படும்.

1. பெரிய ஷிர்க்

2. சிறிய ஷிர்க்

1. பெரிய ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்)

இதன் காரணத்தால் நற்செயல்களில் தோல்வியும் என்றென்றும் நரக நெருப்பில் இருக்க வேண்டிய பயங்கர நிலையுமேற்படும் எனக் குர்ஆன் கூறுகிறது.

‘இன்னும் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்) அவர்களை விட்டும் அழிந்து விடும்.’ (6:88) Continue reading பாடம் – 5